நடிகர் ரஜினிகாந்த் முதலில் தமிழகத்துக்கு தண்ணீர் கொடுக்க மறுக்கும் கர்நாடகா சென்று சிஸ்டத்தைச் சரிசெய்ய வேண்டும் என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் சிஸ்டம் சரியில்லை என்று ரஜினிகாந்த் விமர்சித்தது பற்றி ஜெயக்குமாரிடன் செய்தியாளர்கள் கேள்வியெழுப்பினர். அதற்குப் பதிலளித்த ஜெயக்குமார், ``அ.தி.மு.க-வில் 1.5 கோடி தொண்டர்கள் இருக்கிறார்கள். 1.5 கோடி புலிகள் என்றுகூட சொல்லலாம். அந்த வீரமிக்க புலிகளை சீண்டி பார்க்கக் கூடாது. அரசு மீது தவறு இருந்தால் சுட்டிக்காட்டுங்கள். அது தவறு என்றால் திருத்தி கொள்வோம். அவர் சொல்லும் விதம் சரியில்லை. அவர் ஆன்மீக அரசியலைப் பின்பற்றுவதில் எங்களுக்குப் பிரச்னை இல்லை. நாங்கள் அண்ணா வகுத்து கொடுத்த, எம்.ஜி.ஆர் வகுத்து கொடுத்த கொள்கைகளைப் பின்பற்றுவோம். ஏழைகள் நலனுக்கான ’அண்ணாயிசம்’ கொள்கை எங்களுடையது. சமூக நீதியை பேணி காப்போம். சாதி, மதம் பாகுபாடுகள் இல்லாமல் சகோதரர்கள்போல நாம் இருக்கிறோம். ஆனால், ரஜினி ஆன்மீக அரசியலின் மூலம் ஒரு மத சார்புள்ள அரசை நிறுவ நினைக்கிறார். அது நடக்காது. சிஸ்டம் சரியில்லை என்று பி.இ பட்டதாரிகள்தான் கூறுவார்கள்; ரஜினிகாந்த் என்ன பி.இ பட்டதாரியா. தண்ணீரைக் கொடுக்க மறுக்கும் கர்நாடகாவுக்குச் சென்று ரஜினி முதலில் சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்'' என்றார்.

0 Responses to ரஜினி முதலில் கர்நாடகா சென்று சிஸ்டத்தை சரிசெய்ய வேண்டும்: ஜெயக்குமார்