Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

இலங்கையில் கூடுதலான நேரடி முதலீடுகளை மேற்கொள்ள தமது நாடு தயாராக இருப்பதாகவும், அதற்கான வேலைத்திட்டம் எதிர்காலத்தில் அமுலாக்கப்படும் என்றும் பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் தெரிவித்துள்ளார். 

பொதுநலவாய இராஜ்ய தலைவர்கள் மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இலண்டன் சென்றுள்ள ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடனான சந்திப்பிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார். இந்தச் சந்திப்பு நேற்று வியாழக்கிழமை இடம்பெற்றது.

குறித்த சந்திப்பில் இருதரப்பு வர்த்தக உறவுகளை மென்மேலும் வலுப்படுத்துவது பற்றி ஆராயப்பட்டது. இலங்கையில் நிலவும் முதலீட்டு வாய்ப்புக்கள் பற்றிய தகவல்களை பிரித்தானியாவின் சர்வதேச வர்த்தக அலுவல்களுக்கான அமைச்சின் இணையத்தில் சேர்க்கப் போவதாக அமைச்சர் லியாம் ஃபொக்ஸ் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன கருத்து வெளியிடுகையில், இலங்கையில் வெளிநாட்டு முதலீடுகள் கணிசமான வளர்ச்சியை பதிவு செய்துள்ளதாகக் குறிப்பிட்டார். சர்வதேச அரங்கில் பிரித்தானியா வழங்கும் ஒத்துழைப்பை ஜனாதிபதி பாராட்டியுள்ளார்.

0 Responses to இலங்கையில் நேரடி முதலீடுகளை மேற்கொள்ளத் தயார்: பிரித்தானியா

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com