Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

டெல்லியில் பாலியல் வன்முறையில் கொல்லப்பட்ட கல்லூரி மாணவிக்கு ஐ.நா பொதுச்செயலாளர் பான் கீ மூனும் தனது இரங்கலை வெளியிட்டுள்ளார்.

 மாணவியின் மரணத்திற்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவிப்பதாகவும், மாணவி மீது நடத்தப்பட்ட மிருகத்தனமான செயலை கண்டிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.  மேலும் இச்சம்பவத்துடன் தொடர்புடைய குற்றவாளிகளை உடனடியாக நீதியின் முன் நிறுத்த வேண்டும்.

உலகின் பெண்களுக்கு எதிராக நடத்தப்படும் குற்றங்களை ஒரு போதும் மன்னிக்க முடியாது. ஏற்றுக்கொள்ள முடியாது. பொறுமை காக்க முடியாது எனவும் அவர் கூறியுள்ளார்.

இவ்வருடத்தில் இதுவரை டெல்லி காவல்துறையினருக்கு கிடைக்கப்பெற்ற 600 க்கு மேற்பட்ட பாலியல் பலாத்கார வழக்குப்பதிவுகளில் 754 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். எனினும் ஒரே ஒரு வழக்கில் மற்றுமே சந்தேக நபர் குற்றவாளியாக உறுதி செய்யப்பட்டுள்ளார்.  கடந்த ஐந்து வருடங்களில் ஒப்பிடுகையில் இவ்வருடமே அதிகளவிலான பாலியல் பலாதகர சம்பவங்களுக்கான வழக்கு பதிவுகள் இடம்பெற்றுள்ளன. 384 வழக்குகள் இதுவரை நிலுவையில் உள்ளன.

இதேவேளை உயிரிழந்த டெல்லி மாணவிக்கு நீதி கோரியும், பெண்களின் பாதுகாப்பை வலுப்படுத்தக்கோரியும் டெல்லி ஜந்தர் மந்தர் பகுதியில் இன்று காலை முதல் தொடர்ந்து வரும் அமைதி வழிப்போராட்டம் மீண்டும் வன்முறை வெடிக்கும் அபாயத்திற்கு சென்றுள்ளது. காவல்துறையினருக்கும்,  பாஜகவின் மாணவர் அமைப்புக்கும் இடையில் இன்று நண்பகல் மோதலொன்று வெடித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

0 Responses to பெண்களுக்கு எதிரான வன்முறைகளை ஒரு போதும் மன்னிக்க முடியாது: பான் கீ மூன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com