Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வீரத்தையும், காதலையும் போற்றிவளர்த்த தொன்மைசார் எம் தமிழினத்தை அடிமைப்படுத்திட, அதன் மீது ஆதிக்கம் செலுத்திட நினைத்திட்ட, முனைந்திட்ட சிங்கள ஆட்சியாளர்களுக்கு எதிராக தம் தார்மீக உரிமையான தமிழீழம் கோரி அறவழியிலும், ஆயுதவழியிலும் நெடுங்கால போராட்டங்களை முன்னெடுத்தது எம் ஈழத்தமிழ்ச்சமூகம். அதற்கு துணை நின்றது தாய்த்தமிழகம். காரணம், குருதியில் நிறைந்திருக்கும் இன உணர்வேயன்றி வேறில்லை.

இன்றைக்கும், என்றைக்கும் தமிழீழ தேசியத்தலைவர் மேதகு. பிரபாகரன் அவர்களை தம் இலட்சிய நாயகனாக, அடிமைத்தளையை - ஆதிக்கத்தினை உடைத்தெறிய வெகுண்டெழுந்த கலகக்குரலாக நினைத்து பின்பற்றிட கூடிய இலட்சோப லட்சம் இளைஞர்கள் தமிழகம் மட்டுமல்ல உலகம் முழுவதும் நிறைந்திருக்க கூடிய சூழலில், தமிழகத்திலுள்ள தமிழ்த்தேசிய உணர்வாளர்கள் சிலர் போலி தமிழ்த்தேசியம் பேசுவோர் குறித்து கவலைதோய்ந்த குரலில் தம் வருத்தங்களை பதிவு செய்கின்றனர்.

ஆம், ஓர் தேசிய இனத்தின் தார்மீக உரிமையான விடுதலைப் போராட்டத்தினை முன்னெடுத்த அப்பழுக்கற்ற தலைவரின் பெயரையும், அவர் சார்ந்த இயக்கத்தின் பெயரையும் தற்போதைய நிலையில் சிலர் தங்களின் அரசியல் மற்றும் இன்னபிற சுய லாபங்களுக்காக பயன்படுத்துவதாகவும், அத்தகைய போக்கு தவிர்க்க பட வேண்டுமென்றும் கவலை தெரிவிக்கின்றனர் அவர்கள். புரிந்துகொள்வார்களா அத்தகையோர்கள்.

0 Responses to தேசிய தலைவர் பெயரை சுய லாபத்திற்காக பயன்படுத்துவதா?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com