Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

வடமராட்சியின் உடுப்பிட்டிப்பகுதியில் தொடரும் கொள்ளைகள் மற்றும் கொள்ளை முயற்சிகள் மக்களிடையே அச்சத்தைதோற்றுவித்துள்ளது.

நேற்று புதன்கிழமை இரவு உடுப்பிட்டியின் போக்காலை பகுதியில் இரண்டு வீடுகளில் கொள்ளையிட மேற்கொள்ளப்பட்ட முயற்சி மக்களால் முறியடிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.அப்பகுதியில் மரணவீடொன்றிற்கு வீட்டவர்கள் சென்றிருந்த நிலையில் கொள்ளை முயற்சி நடந்துள்ளதாக சொல்லப்படுகின்றது.

இதனிடையே உடுப்பிட்டி புளியடிப்பகுதியில் வீடொன்றினில் சுமார் 47 இலட்சம் வரையிலான பணம் கொள்ளையிடப்பட்டதாக தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில் அதனில் 27 இலட்சம் மீட்கப்பட்டுள்ளதாக வல்வெட்டித்துறை காவல்துறை அறிவித்துள்ளது.மருத்துவ சத்திரசிகிச்சையொன்றிற்காக இந்தியாவிற்கென எடுத்துச்செல்ல தயாராக இருந்த பணம் வௌ;வேறாக பொதி செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த பொதி வீட்டு வளவிலிருந்து மீட்கப்பட்டுள்ளது.

வீட்டிலிருந்த வயோதிப பெண்களது நலன்கருதி குறித்த பணம் வல்வெட்டித்துறை காவல்துறையினரால் வங்கியில் வைப்பிலிட்டு உதவி வழங்கப்பட்டுள்ளது.

எனினும் குறித்த வீட்டினில் இருந்து கொள்ளையர்களால் கொள்ளையிடப்பட்டு கொண்டு செல்லப்பட்ட பணம் தொடர்பாக முழுமையான தகவல்களை பெறமுடியாதிருப்பதாகவும் காவல்துறை தரப்புக்கள் கூறுகின்றன.

வல்;வெட்டித்துறை காவல்நிலைய எல்லையினுள் அடுத்தடுத்து நடந்துவரும் கொள்ளையினை தடுக்க முடியாது காவல்துறை திண்டாடுகின்றதாவென்ற கேள்வி எழுந்துள்ளது.

குறிப்பாக வீட்டில் ஆட்களில்லாத வேளைகளிலும் அதே போன்று தனித்து வயோதிப குடும்பங்களை இலக்கு வைத்து கொள்ளைகள் தொடர்ந்து கொண்டேயிருக்கின்றன.அதே போன்று தொடரும் கொள்ளை முயற்சிகள் மக்களிடையே அச்சத்தையும் தோற்றுவித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

0 Responses to தொடரும் கொள்ளை முயற்சிகள்:அச்சத்தில் உடுப்பிட்டி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com