“பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன என்னைத் தொடர்ப்பு கொண்டு, குறித்த தீர்மானத்தை நிறைவேற்றுவதற்கு உதவி கோரினார்.” என்று முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பு ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.
மஹிந்த ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “எதிர்வரும் 2020ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, என்ன செய்யப் போகின்றார் என்பது தொடர்பில் எனக்குத் தெரியாது. ஏனெனில், அவருடன் நான் தற்போது தொடர்பில் இல்லை. எனினும், பிரதமருக்கு எதிரான நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் போது மாத்திரம், அவர் என்னிடம் உதவி கோரியிருந்தார். பிரதமருக்கு எதிராக, பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்ட போது, அது தொடர்பான தீர்மானம், ஜனாதிபதி கையிலேயே தங்கியுள்ளது என்று நான் அப்போதே கூறினேன்.” என்றுள்ளார்.

0 Responses to ரணிலை தோற்கடிப்பதற்கு மைத்திரி என்னிடம் உதவி கோரினார்: மஹிந்த