வடக்கு மாகாண மீன்பிடி அமைச்சராக பதவி வகித்த பா.டெனீஸ்வரனை அமைச்சுப் பதவியிலிருந்து பதவி நீக்கியமைக்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெள்ளிக்கிழமை இடைக்காலத் தடை விதித்து தீர்ப்பளித்துள்ளது.
வடக்கு மாகாண அமைச்சரான பதவி வகித்த டெனீஸ்வரனை கடந்த ஆண்டு ஓகஸ்ட் மாதம், வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் பதவி நீக்கியிருந்தார். அதற்கு எதிராக டெனீஸ்வரன் மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்திருந்தார்.
இரு தரப்பு சமர்ப்பணங்களும் முடிவடைந்த நிலையில், வழக்கு தீர்ப்புக்காக இன்று எடுத்துக் கொள்ளப்பட்டது. இதன்போது, அமைச்சர் பதவியிலிருந்து டெனீஸ்வரனை பதவி நீக்கியமையை நீதிமன்றம் நிராகரித்துள்ளது. அவரது அமைச்சுப் பதவிகளை தற்போது வகிக்கும் அமைச்சர்களையும் தொடர்ந்து செயற்படுவதற்கு நீதிமன்றம் தடை விதித்துள்ளது. தீர்ப்பின் பிரதி உடனடியாக வடக்கு மாகாண ஆளுநர் மற்றும் வடக்கு மாகாண முதலமைச்சருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

0 Responses to டெனீஸ்வரன் பதவி நீக்கத்துக்கு இடைக்காலத் தடை; மேன்முறையீட்டு நீதிமன்றம் தீர்ப்பு!