Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விஜயகலா குறித்து இறுதி முடிவுகள்!

பதிந்தவர்: தம்பியன் 26 July 2018

ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்குழு அடுத்த மாதம் கூடுகையில், முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தொடர்பிலான தனது இறுதி நிலைப்பாட்டை எடுக்குமென கட்சியின் தவிசாளரும், அமைச்சருமான கபிர் ஹாசிம் தெரிவித்துள்ளார்.

கட்சி அவரிடம் விசாரணை நடத்தவுள்ளதோடு, அதன் பின்னர் இறுதி முடிவு எடுக்கப்படுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். யாழ்ப்பாணம் வீரசிங்கம் மண்டபத்தில் கடந்த 2ஆம் ஆம் திகதி இடம்பெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்று உரையாற்றிய, அப்போதைய இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் “தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் எப்படி இருந்தோம் என்பதை உணர்வுபூர்வமாக உணரும் நிலையில் இருக்கின்றோம்.

இன்றுள்ள நிலையில் விடுதலைப் புலிகளை மீள உருவாக்க வேண்டியதே எமது முக்கிய நோக்கம்” என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் சர்ச்சைக்குரிய இந்த கருத்துத் தொடர்பில் விஜயகலா சார்ந்த ஐ.தே.கவுக்குள்ளேயே எதிர்ப்புகள் கிளம்பவே, அவர் தனது இராஜாங்க அமைச்சுப் பதவியை இராஜினாமா செய்ததோடு, கட்சியின் ஒழுக்காற்று நடவடிக்கையை எதிர்கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 Responses to விஜயகலா குறித்து இறுதி முடிவுகள்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com