யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணை கிழக்கு கிராம அலுவலகர் வாள் முனையில் அச்சுறுத்தப்பட்டதுடன், அவரது அலுவலகம் அடித்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
வாள்கள் கம்பிகளுடன் பட்டப்பகலில் நுழைந்த 8 பேர் கொண்ட கும்பல் இந்த அட்டூழியத்தை அரங்கேற்றி தப்பிச்சென்றது. வண்ணார்பண்ணை கிழக்கு ஜே 100 கிராம அலுவலகரின் அலுவலகத்தில் இன்று நண்பகல் 12.20 மணியளவில் இந்த அடாவடிச் சம்பவம் இடம்பெற்றது. அலுவலகத்துக்குள் புகுந்த கும்பல், கிராம அலுவலகரின் கழுத்தில் வாளை வைத்து அச்சுறுத்திய கும்பல், அலுவலகத்திலிருந்த லப் டொப், கைபேசி என்பனவற்றை அடித்து உடைத்தது.
மேலும் அலுவலகத்துக்கு முன்பாக நின்ற முச்சக்கர வண்டி, மோட்டார் சைக்கிள், சைக்கிள் மற்றும் பெறுமதியான பொருள்களை அடித்து சேதப்படுத்திய கும்பல், அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளது. சம்பவம் தொடர்பில் அறிவிக்கப்பட்டதையடுத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 Responses to யாழில் கிராமசேவகர் மீது தாக்குதல் முயற்சி - அலுவகம் அடித்து நொருக்கப்பட்டது