Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மன்னார் 'சதொச'விற்பனை நிலைய வளாகத்தில் இன்று திங்கட்கிழமை 43 ஆவது நாளாகவும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்ற நிலையில் குறித்த மனித புதைகுழி அகழ்வின் போது, மனதை கனப்படுத்தும் விதமாக தாய் ஒருவரும் அவர் அருகே பச்சிளம் குழந்தை ஒன்றின் மனித எச்சமும் மீட்கப்பட்டுள்ளது.

 இன்றும் காலை ஆரம்பிக்கப்பட்ட மனித புதைகுழி அகழ்வின் போதும் ஒரு முதிர்ந்த மனித எச்சமும் அதன் அருகே சிறிய எலும்புகளை கொண்ட மனித எச்சமும் காணப்பட்டதை தொடர்ந்து குறித்த இரு மனித எச்சங்களையும் சுற்றியிருந்த களிமண்களை அகற்றிய சந்தர்பத்தில் அருகருகே புதைக்கப்பட்டிருக்கும் தாயும் பிள்ளையும் என சந்கிக்கபடுகின்ற வகையில் மனித எச்சங்கள் மீட்கப்பட்டுள்ளது.

மீட்கப்பட்ட இரு மனித எலும்புக்கூடுகள் தொடர்பாகவும் எந்த வித துல்லியமான கருத்துக்களும் தங்களால் கூற முடியாது எனவும் முழுமையான பரிசோதனைகளின் பின்னரே கருத்துக்கள் தெரிவிக்க முடியும் எனவும் மேற்படி அகழ்வு பணிகளில் ஈடுபட்டு வரும் நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். தற்போது வரை மன்னார் மனித புதை குழியிலிருந்து 60 மனித எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடதக்கது.

0 Responses to தாயும் குழந்தையும் படுகொலை? மன்னார் புதைகுழி அவலம்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com