“மூட நம்பிக்கைகளுக்கு எதிராக நாம் நம்பிக்கையுடன் போராட வேண்டும்” என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார். மன் கி பாத் நிகழ்ச்சி மூலம் நாட்டு மக்களுக்கு பிரதமர் மோடி உரையாற்றினார்.
அவர் பேசியதாவது: “சில பகுதிகளில் நல்ல மழை பெய்துள்ள செய்தி மகிழ்ச்சியளிக்கிறது. சில மாநிலங்கள் பருவமழையை எதிர்நோக்கியுள்ளன. இந்தியா மிகப்பரந்து விரிந்த நாடு. சில நேரங்களில் கனமழை மக்களுக்கு பெரிய தொந்தரவுகளை கொடுக்கும். இது, இயற்கையுடன் நாம் முரண்படுவதால் நடக்கிறது. இயற்கை, சுற்றுச்சூழல் மற்றும் இயற்கை வளத்தில் சமநிலை நிலவுவதை பாதுகாக்க வேண்டியது நமது கடமையாகும்.
வாழ்க்கையில் புது அடியை எடுத்து வைக்கும் இளைஞரகளுக்கு ஜூலை மாதம் மிகவும் முக்கியம். இந்த நேரத்தில், அவர்களின் நோக்கம், கேள்வியலிருந்து 'கட் ஆப்', வீட்டிலிருந்து விடுதி, பெற்றோர்களின் ஆலோசனையலிருந்து பேராசிரியர்களின் ஆலோசனை கிடைக்கும் நேரம் இது. இந்த புதியஅத்தியாயத்தை எனது நண்பர்கள் உற்சாகத்துடனும், மகிழ்சசியுடனும் எதிர்கொள்வர்கள். கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் அமைதியாக இருந்து வாழ்க்கையை மகிழ்ச்சியாக கொண்டாடுங்கள். கல்லூரி செல்ல தயாராகும் மாணவர்கள் நன்றாக படிக்க வேண்டும். அவர்களின் ஆர்வம் எப்போதும் குறையக்கூடாது. பள்ளியிலிருந்து கல்லூரி செல்வது முக்கியமானது. தொழில்நுட்பத்தில் இளைஞர்கள் மாற்றத்தை கொண்டு வந்துள்ளனர்.
அமெரிக்கா சென்றிருந்த போது, அங்குள்ள இந்திய இளைஞர்களிடம் தொழில்நுப்டம் மூலம் இந்தியாவிற்கு உதவி செய்ய வழிவகை காணுங்கள் எனக்கூறினார். ரேபரேலியை சேர்ந்த இரண்டு இளைஞர்கள் இதனை ஏற்று கொண்டு, ஸ்மார்ட் கோவான் ஆப் ஒன்றை உருவாக்கினர். அதிலிருந்து, கிராம மக்கள் அனைத்து தகவல்களையும் தங்களது மொபைலில் இருந்து பெற்று கொள்ளலாம். சமூக கொடுமைகளுக்கு எதிராக , நமது துறவிகளின் போதனைகள் இன்னும் நம்மை ஊக்கப்படுத்தும்.மூட நம்பிக்கைக்கு எதிராக நாம் நம்பிக்கையுடன் போராட வேண்டும்.” என்றுள்ளார்.

0 Responses to மூட நம்பிக்கைகளுக்கு எதிராக போராட வேண்டும்: மோடி