Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

முன்னாள் பாதுகாப்புச் செயலாளரான கோட்டாபாய ராஜபக்ஷ தன்னுடைய அரசியல் நலனுக்காக முரணான கருத்துக்களை வெளியிட்டு வருகின்றார் என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும், புளொட் அமைப்பின் தலைவருமான தர்மலிங்கம் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது, “2009ஆம் ஆண்டு நிறைவடைந்து சொற்ப காலங்களிலேயே புளொட் அமைப்பிடம் இருக்கும் ஆயுதங்களை கையளிக்குமாறு எமக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. அச்சமயத்தில் எமது அமைப்பு ஆயுதங்களை கையளித்து விட்டது. யுத்தத்தின் பின்னரான சூழலில் ஆயுதங்களை வைத்திருக்க வேண்டிய அவசியமும் எமக்கு இருக்கவில்லை.

இந்த நிலையில் கோட்டாபய ராஜபக்ஷ குறிப்பிடுவது போன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இணைந்தமைக்கும் ஆயுதங்களை கையளித்தமைக்கும் எந்த விதமான தொடர்புகளும் கிடையாது. அவரைப் பொறுத்தவரையில் அரசியல் நலன்களுக்காக முற்றிலும் மாறுபட்ட கருத்துக்களை முன்வைக்கின்றார்.” என்றுள்ளார்.

0 Responses to அரசியல் நலனுக்காக கோட்டாபய ராஜபக்ஷ முரணான கருத்துக்களை வெளியிடுகிறார்: த.சித்தார்த்தன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com