Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அபிவிருத்தி நடவடிக்கைகள் கடந்த காலங்களில் நாட்டின் சில பகுதிகளுக்கு மட்டுமே மட்டுப்படுத்தப்பட்டிருந்ததன் காரணமாக ஏற்பட்ட ஏற்றத் தாழ்வுகளை நீக்கி, சமமான அபிவிருத்தியை முழு நாட்டுக்கும் வழங்கும் விரிவான நிகழ்ச்சித் திட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.

‘எழுச்சிபெறும் பொலன்னறுவை’ நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் 180 அபிவிருத்தி திட்டங்களை மக்களிடம் கையளிக்கும் வரலாற்று முக்கியத்துவமிக்க நிகழ்ச்சித் திட்டத்தின் அங்குரார்ப்பண நிகழ்வை முன்னிட்டு திவுலங்கடவல மத்திய கல்லூரியில் நேற்று புதன்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் உரையாற்றும் போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும் கூறியுள்ளதாவது, “பொலன்னறுவை மட்டுமன்றி நாட்டின் அனைத்து பிரதேசங்களிலும் இந்த பாரிய அபிவிருத்தி புரட்சி ஆரம்பிக்கப்படும். கொங்கிரீட் அபிவிருத்தியன்றி மக்களின் தேவை மற்றும் அவர்களது உணர்வுகளை புரிந்துகொண்டு மக்கள் சார்பு அபிவிருத்தியான இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் நாட்டு மக்களின் வாழ்க்கையை சுபீட்சத்தை நோக்கி கொண்டு செல்லும்.” என்றுள்ளார்.

0 Responses to ஏற்றத் தாழ்வுகளை நீக்கி நாடளாவிய ரீதியில் விரிவான அபிவிருத்தி: மைத்திரி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com