யாழ்ப்பாணத்திலுள்ள கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்துவதற்கு முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்களில் எந்தவித உண்மையும் இல்லை என்று இராணுவத் தளபதி மகேஷ் சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
கோட்டைக்குவரும் சுற்றுலாப் பயணிகளுக்கு இராணுவத்தினர் எந்த விதத்திலும் தடையாக இருக்கமாட்டார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.
யாழ்ப்பாணத்துக்கு நேற்று புதன்கிழமை வருகை தந்திருந்த இராணுவத் தளபதி, யாழ். கோட்டைக்குச் சென்று அங்குள்ள இராணுவத்தினரைச் சந்தித்த பின்னர் ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும்போதே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
யாழ். ஒல்லாந்தர் கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்துவதற்கு முயற்சிகள் எடுக்கப்படுவதாகத் தெரிவித்து அதற்கு எதிராக ஆர்ப்பாட்டங்கள் முன்னெடுக்கப்பட்டிருந்தன. இவ்வாறான நிலையிலேயே இராணுவத் தளபதி கோட்டைக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தார்.
அவர் கூறியுள்ளதாவது, “யாழ். நகர மக்களின் பாதுகாப்பை முன்னிட்டு கடந்த இருபத்தைந்து வருடங்களுக்கு மேலாக சிறியதொரு தொகையைக் கொண்ட இராணுவத்தினர் கோட்டையில் இருந்து வருகின்றனர். இது நாட்டின் ஏனைய பகுதிகளில் இருப்பதைப் போன்றதொரு சாதாரண விடயமாகும்.
இவ்வாறான நிலையில் யாழ். கோட்டையை இராணுவத்தினர் கையகப்படுத்த முயற்சிப்பதாக முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் உண்மைக்குப் புறம்பானவை. இராணுவத்தினரால் கோட்டைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு எந்தத் தடையும் ஏற்படாது. பொது மக்கள் முழு சுதந்திரத்துடன் கோட்டைக்குள் வந்து பார்வையிட்டுச் செல்ல முடியும்.
அதேநேரம், இராணுவத்தினர் வசம் எஞ்சியுள்ள மேலும் சொற்ப காணிகளை விடுவிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. கூடிய விரைவில் அவற்றை விடுவிப்போம்.” என்றுள்ளார்.

0 Responses to யாழ். கோட்டையை கையகப்படுத்தும் எந்த எண்ணமும் இராணுவத்துக்கு இல்லை: மகேஷ்