குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமற்போனோருக்கான அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மை கிடைக்கப் போகின்றது என்று வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
‘காணாமற்போனோர் அலுவலகம் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்திசெய்யக் கூடிய அலுவலகம் அல்ல. பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பரிந்துரைகளுக்கு அமைய குற்றவாளிகளுக்கு அரசாங்கம் தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும்.’ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
‘கடந்த அரசாங்கத்தின் காலத்தில் நியமிக்கப்பட்ட பரணகம ஆணைக்குழு தற்காலிகமானது. ஆனால் தற்பொழுது அமைக்கப்பட்டுள்ள காணாமற்போனோருக்கான அலுவலகம் நிரந்தர அலுவலகமாக இருக்கின்றபோதும், மக்களின் எதிர்பார்ப்புக்களைப் பூர்த்தி செய்யக் கூடிய ஒரு அலுவலகமாக அது தென்படவில்லை’ என்றும் சி.வி.விக்னேஸ்வரன் கூறியுள்ளார்.
காணாமற்போனோருக்கான அலுவலகத்தை ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என்று பாதிக்கப்பட்ட மக்களில் குறிப்பிட்டளவானவர்கள் கூறி வருகின்றனர். இதுபற்றி ஊடகமொன்று கேள்வி எழுப்பிய போதே முதலமைச்சர் மேற்கண்ட கருத்துக்களை முன்வைத்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது, “காணாமற்போனோர் அலுவலகத்தின் தலைவர் மனிதாபிமானம் மிக்க ஒருவர் என்பதுடன், பல தமிழ் இளைஞர்கள் சார்பில் நீதிமன்றங்களில் வாதாடியுள்ளார். அது மட்டும் ஒரு அலுவலகத்தை திறன்மிக்கதாக ஆக்காது.
பரணகம ஆணைக்குழுவின் அறிக்கையில் பிழைசெய்தவர்கள் மற்றும் கைதுசெய்யப்பட்டவர்கள் என 2000ற்கும் அதிகமானவர்கள் தொடர்பான விபரங்கள் வழங்கப்பட்டு நடவடிக்கை எடுக்கவேண்டும் என கடந்த அரசிடம் வலியுறுத்தப்பட்டிருந்தது. இதுவரை எவருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
அதுபோன்றதொரு நிலை இந்த காணாமற்போனோருக்கான அலுவலகத்துக்கும் ஏற்படாது என்பதற்கு என்ன உத்தரவாதம் உள்ளது. அது மாத்திரமன்றி குறித்த அலுவலகத்துக்கு விசாரணை செய்வதற்கான அதிகாரம் மாத்திரமே வழங்கப்பட்டுள்ளது. குற்றம் புரிந்ததாக காணப்பட்டால் அதுபற்றி உரிய தரப்புக்கு அறிவிக்க வேண்டும். அவ்வாறு அறிவிக்கத் தவறினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு எந்த பிரதிபலனும் கிடைக்கப்போவதில்லை.” என்றுள்ளார்.

0 Responses to குற்றவாளிகளைத் தண்டிக்க முடியாத காணாமற்போனோர் அலுவலகத்தால் மக்களுக்கு என்ன நன்மை?; சி.வி.விக்னேஸ்வரன் கேள்வி!