Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பிரித்தானியப் படையினரால் இந்தியாவில் மேற்மேற்கொள்ளப்பட்ட ஜாலியன் வாலாபாக் படுகொலை, அமெரிக்க இராணுவத்தினரால் வியட்நாமில் மேற்கொள்ளப்பட்ட மைலாய் படுகொலை என்ற வராலாற்றுப் புகழ்பெற்றுவிட்ட துயரம் நிறைந்த கொலைகளின் வரிசையில், வல்வெட்டித்துறைப் படுகொலைகளும் இடம்பெற்று விட்டது என்பதை எவரும் எந்தக் காலமும் மூடி மறைத்து விடமுடியாது.

1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் இந்திய இராணுவத்தினர் வல்வெட்டித்துறையில் நடாத்திய படுகொலைகள் இன்றும் கூட எமது நெஞ்சைவிட்டு அகலாது இருக்கின்ற ஒரு துன்பியல் நிகழ்வாகும்.

இந்திய இராணுவத்தினரின் தாக்குதல்கள் முடிந்து அந்தப் பிரதேசத்தை விட்டு இராணுவம் முகாம்களுக்குத் திரும்பிய பின் வல்வெட்டித்துறைக்குச் சென்று பார்த்தவர்களால், அங்கு நடைபெற்று முடிந்த கொடூரங்களை ஜீரணிக்க முடியவில்லை.

இந்தப் படுகொலைகளின் பொழுது, ஆண், பெண், முதியோர், குழந்தைகள் என்ற வேறுபாடுமின்றி அங்குமிங்குமாக 71 பொதுமக்கள், சுட்டும், வெட்டியும், எரித்தும் கொல்லப்பட்டிருந்தனர். இதில் பலர் நிலத்தில் முகங் குப்பறப் படுக்கவைக்கப்பட்ட நிலையில் முதுகில் சுடப்பட்டிருந்தனர். நூற்றுக்கும்மேற்பட்டபொதுமக்கள்காயமடைந்திருந்தனர்

123 வீடுகள் முற்றாக எரிக்கப்பட்டு நாசமாக்கப்பட்டன, 45 கடைகள் சூறையாடப்பட்டு தீயிடப்பட்டன, வல்வை சன சமூக நிலையம் மற்றும் பொது நூலகம், பாடசாலைகள் என்பன தீயிடப்பட்டன, பல ஆயிரக்கணக்கான நூல்கள், தளபாடங்கள் கொழுத்தப்பட்டிருந்ததுடன் நூலகத்தில் இருந்த காந்தி, நேரு, நேதாஜி, இந்திரா காந்தி போன்ற இந்தியத் தலைவர்களின் படங்கள் கூட நொருக்கப்பட்டு தீயிடப்பட்டு இருந்தன.

176 மீன்பிடி வள்ளங்கள் எரிக்கப்பட்டன, வல்வெட்டித்துறை சிவன் கோயில், வல்வை முத்துமாரி அம்மன் கோயில், கப்பலுடையவர் கோயில், ஆதி கோயில், உட்பட பத்துக்கு மேற்பட்ட வணக்க ஸ்தலங்கள் எரியூட்டப்பட்டன.

1989ஆம் ஆண்டு ஆகஸ்ட் 2ஆம், 3ஆம், 4ஆம் திகதிகளில் படுகொலை செய்யப்பட்டுத் தாயகத்தின் விடிவுக்காய்த் தமதுயிரை நீத்தமக்களை இன்று உலகமே நினைவு கூர்ந்து கொண்டிருக்கின்றது.

இன்று வல்வைப் படுகொலையின் 29வது ஆண்டு நிறைவு இலண்டனிலும் வல்வெட்டித்துறையிலும் நினைவு கூரப்படுகின்ற இந்தப் படுகொலைகளின் பொழுது உயிர்நீத்த 71 பொதுமக்களுக்கும் எமது அஞ்சலியைத் தெரிவித்துக் கொள்கின்றோம்!

-நடராஜா அனந்தராஜ்

0 Responses to இந்திய இராணுவத்தால் வல்வையில் படுகொலை செய்யப்பட்டவர்களின் 29வது ஆண்டு நினைவு நாள் இன்று!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com