Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பெங்களூருவை சேர்ந்த ஜனார்த்தன ஷர்மா, 2013ஆம் ஆண்டு தனது மூன்று மகள்களையும் பெங்களூரில் நித்யானந்தா நடத்தும் கல்வி நிறுவனத்தில் சேர்த்துள்ளார். ஆனால் அவர்கள் பெங்களூரில் இருந்து அஹமதாபாத்திலுள்ள நித்தியானந்தாவின் நிர்வாகத்திற்கு மாற்றப்பட்டுள்ளனர். இந்த செய்தி அறிந்து அதிர்ச்சியான ஷர்மா, தனது மகளை பார்க்க அஹமதாபாத்திற்குச் சென்றுள்ளார். அங்கு அவரை மகள்களை பார்க்க அனுமதிக்கவில்லை. இதையடுத்து ஷர்மா, தனது மகள்களை மீட்டுத் தருமாறு உயர்நீதிமன்றத்தில் மனு அளித்துள்ளார். இது குறித்து காவல்துறையும், குஜராத் மகளிர் மற்றும் குழந்தைகள் நல ஆணைய அதிகாரிகளும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.  பின்பு தொடர் புகார் வந்து கொண்டிருப்பதால் ஹீராபூரில் உள்ள நித்யானந்தாவின் ஆசிரமத்தை மூட குஜராத் அரசு உத்திரவிட்டுள்ளது.

இந்த நிலையில்  தென் அமெரிக்காவின் ஈக்வடாரில் ஒரு புதிய தீவு ஒன்றை விலைக்கு வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. அந்த தீவிற்கு அவர் கைலாசம் என பெயர் வைத்துள்ளதாகவும், தற்போது அவருடன் இரண்டு பெண் சீடர்களும், குஜராத்தில் புகார் கூறிய ஜனார்த்தன ஷர்மாவின் மூத்த மகளும், 30 க்கும் மேற்பட்ட பெண் பக்தர்களும் அங்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் இதற்கென்று தனி 'வெப்சைட்' ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. அதோடு அந்த தீவை தனி நாடு போல் உருவாக்க நித்தியானந்தா திட்டமிட்டு வருவதாக கூறுகின்றனர். மேலும் அந்த தீவிற்கு தனி கொடி, தனி பாஸ்போர்ட் என அந்த நாட்டு அரசு உதவியுடன் இதெல்லாம் செய்ய போவதாக கூறுகின்றனர். இந்த தீவு வாங்கும் அளவுக்கு நித்தியானந்தாவிற்கு பணம் எப்படி வந்தது என்று கேள்வி எழுப்பி வருகின்றனர். ஆனால் இந்த பணம் எல்லாம் உலகம் முழுவதும் இருக்கும் நித்தியானந்தா பக்தர்களிடம் நிதியாக பெற்ற பணம் என்று கூறிவருகின்றனர். மேலும் எத்தனை கோடிக்கு இந்த தீவை வாங்கினார் என்று இதுவரை எந்த ஒரு தகவலும் வெளிவராமல் ரகசியமாக உள்ளது.

0 Responses to நித்தியானந்தாவிடம் இவ்வளவு பணம் வந்தது எப்படி? அதிர வைத்த நித்தி பற்றிய தகவல்!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com