தாயக விடுதலைக்காய் தம்முயிர் ஈந்தவர்களை நினைவுகூரும் தமிழீழத் தேசிய மாவீரர்நாள் 2015 நிகழ்வுகள் பெல்ஜியத்தில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்றது.
பெல்ஜியத்தில் பேரெழுச்சியுடன் நடைபெற்ற தேசிய மாவீரர்நாள் 2015 நிகழ்வுகள் Antwerpen மாநிலத்தில் அமைந்துள்ள நினைவுக்கல்லரையில் 27ம் திகதி காலை 10.00 மணிக்கு வீரவணக்க நிகழ்வு இடம்பெற்றது.
பெல்ஜியம் Antwerpen மாநிலத்தில் உள்ள மண்டபத்தில் தமிழீழத் தேசியக்கொடியேற்றலைத் தொடர்ந்து தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களின் 2008ம் ஆண்டு உரையிலிருந்து, காலத்தின் தேவையைச் சுட்டிநிற்கும் சிறுதொகுப்பு காண்பிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து, தமிழீழ விடுதலைப் புலிகளின் உத்தியோகபூர்வ தேசிய மாவீரர்நாள் அறிக்கை ஒலிபரப்பப்பட்டது. மணியோசை ஒலிக்க, நிகழ்வுகள் யாவும் வழமையான மரபு முறைப்படி உணர்வெழுச்சியுடன் கடைப்பிடிக்கப்பட்டது.
தாயக விடுதலை வேள்வியில் தம் இன்னுயிர்களை ஈகம் செய்த மாவீரர்களின் குடும்ப உறவுகளுக்கான மதிப்பளிப்பானது அந்நிகழ்வுக்குரிய மகத்துவத்துடன் மாவீரர் நிகழ்வு மண்டபத்தில் நடைபெற்றது. இந்நிகழ்வில் பெல்ஜியம் வாழ் மாவீரர் குடும்பங்களைச் சேர்ந்த உறவுகள் கலந்து சிறப்பித்திருந்தார்கள்.
தேசிய மாவீரர்நாள் நிகழ்வில், பெல்ஜியத்தின், அனைத்து மாநிலங்களிலிருந்தும் மக்கள் வருகை தந்து தங்கள் வரலாற்றுக் கடமைக்கான உறுதிமொழியை மாவீரர் திருவுருவப் படங்களுக்கு முன்னால் எடுத்தமையானது பெல்ஜியம் வாழ் தமிழ் மக்களின் தேசிய உணர்வை வெளிப்படுத்தி நிற்கின்றது.

0 Responses to பெல்ஜியத்தில் பேரெழுச்சியோடு மிகவும் உணர்வுபூர்வமாக நடைபெற்ற மாவீரர் நாள்!