Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

கூட்டு எதிரணியின் (மஹிந்த ஆதரவு அணி) பொதுக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பிரதிநிதிகள் பங்குபற்றினால் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பொதுச் செயலாளரும், அமைச்சருமான மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் 17ஆம் திகதி கொழும்பு ஹைட் மைதானத்தில் கூட்டு எதிரணி அரசாங்கத்துக்கு எதிராக பாரிய கூட்டமொன்றை நடத்தவுள்ளது. இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் பங்கேற்கக் கூடாது எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

தமது உத்தரவையும் மீறி கூட்டத்தில் பங்கேற்கும் உறுப்பினர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும். எதிர்காலத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் ஒழுக்காற்று விடயங்கள் தொடர்பில் கடுமையான விதிகள் பின்பற்றப்படும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, கூட்டு எதிரணியால் நடத்தப்படவுள்ள பொதுக் கூட்டத்தில் பங்கேற்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என்று அந்தக் கட்சியின் பொருளாளரும், சமூக வலுவூட்டல் அமைச்சருமான எஸ்.பி.திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.

கட்சியின் அனுமதியைப் பெற்றுக்கொண்டே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இந்தக் கூட்டத்தில் பங்கேற்க வேண்டும். ஓர் இலக்கின் அடிப்படையில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பு தேசிய அரசாங்கத்தில் இணைந்து கொண்டுள்ளது. நோக்கம் நிறைவேற்றப்பட்டதன் பின்னர், தேர்தலில் வெற்றியீட்ட தனித்து செயற்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

0 Responses to கூட்டு எதிரணியின் பொதுக்கூட்டத்தில் ஐ.ம.சு.கூ உறுப்பினர்கள் பங்குபற்றினால் நடவடிக்கை: மஹிந்த அமரவீர

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com