Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

விடுதலைப்புலிகள் நிதி உதவி

பதிந்தவர்: தம்பியன் 07 September 2009

பாகிஸ்தானில் நடைபெற்ற இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் நிதி உதவி செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் கிலானி கூறியுள்ளார்.

பாகிஸ்தானில் கடந்த பிப்ரவரி, மார்ச் மாதங்களில் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகள் நடைபெற்றன. அதில் பங்கேற்பதற்காக, இலங்கை கிரிக்கெட் அணி சென்றிருந்தது. கடந்த மார்ச் 3 ந் தேதி, 2 வது டெஸ்ட் பந்தயத்தின் 3 ம் நாள் ஆட்டத்தில் பங்கேற்பதற்காக, இலங்கை கிரிக்கெட் அணியினர், தாங்கள் தங்கியிருந்த ஓட்டலில் இருந்து கடாபி ஸ்டேடியத்துக்கு சொகுசு பேருந்தில் சென்று கொண்டிருந்தனர்.

ஸ்டேடியத்தை நெருங்கியபோது, பயங்கர ஆயுதங்களுடன் 12 தீவிரவாதிகள், அந்த பஸ் மீது திடீர் தாக்குதல் நடத்தினர். முதலில் கையெறி குண்டுகளை வீசினர். பிறகு ராக்கெட் லாஞ்சர்கள் மற்றும் துப்பாக்கிகளால் கடுமையாக தாக்கினர். உடனே கிரிக்கெட் வீரர்கள், பஸ்சுக்குள் தரையில் படுத்துக் கொண்டனர். இருப்பினும், கேப்டன் மகிளா ஜெயவர்த்தனே, சமரவீரா, குமார் சங்கக்காரா, அஜந்தா மெண்டிஸ், துஷாரா, உதவி பயிற்சியாளர் பால் பர்பிரேஸ் ஆகிய 6 பேரும் காயம் அடைந்தனர்.

இதில் 6 போலீசாரும், 2 அப்பாவிகளும் பலியானார்கள். இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு தலீபான் இயக்கம் பொறுப்பு ஏற்றது.

இந்நிலையில், இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு விடுதலைப்புலிகள் நிதி உதவி செய்ததாக பாகிஸ்தான் பிரதமர் யூசுப் ரஸா கிலானி கூறியுள்ளார். இதுதொடர்பாக இஸ்லாமாபாத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

இலங்கை கிரிக்கெட் அணி மீது தாக்குதல் நடத்திய தீவிரவாதிகளுக்கு விடுதலைப்புலிகள் நிதி உதவி செய்திருக்கலாம். கடந்த வாரம் நான் லிபியா நாட்டில் இலங்கை அதிபர் ராஜபக்சேவை சந்தித்தேன். அப்போது, இலங்கை கிரிக்கெட் அணி மீதான தாக்குதலுக்கு இலங்கையை சேர்ந்த ஒரு குழு நிதி உதவி செய்திருப்பதாக தங்களுக்கு ரகசிய தகவல் கிடைத்திருக்கிறது என்று ராஜபக்சே கூறினார்.

அதற்கு நான், இதுதொடர்பான ரகசிய தகவல்களை தாங்கள் அளிக்க சம்மதித்தால், மேற்கொண்டு விசாரணை நடத்துவதற்காக, பாகிஸ்தான் உள்துறை அமைச்சக அதிகாரிகள் குழுவை இலங்கைக்கு அனுப்பி வைப்பதாக அவரிடம் கூறினேன் என்றார்.

0 Responses to விடுதலைப்புலிகள் நிதி உதவி

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com