மட்டக்கிளப்பில் உள்ள மந்தீவு வைத்தியசாலையில் பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக சற்றுமுன் கிடைத்த தகவல்கள் தெரிவிக்கின்றன. அங்கிருந்த பெருந்தொகையான நோயாளிகளை அப்புறப்படுத்துவதில் பெரும் சிரமம் காணப்படுவதாக அதிர்வின் மட்டு நிருபர் தெரிவித்தார். இராணுவத்தினர் அப்பகுதிக்கு உடனடியாக வரவழைக்கப்பட்டதாகத் தெரிவித்த அவர்,கடற்படையினரும் அங்கு உதவிக்கு வந்துள்ளதாகவும் தெரிவித்தார்.
இந்த வைத்தியசாலை எவ்வாறு தீப்பற்றிக்கொண்டதுஇ அல்லது எவ்வளவு நோயாளர்கள் இத் தீ விபத்தில் பாதிக்கப்பட்டுள்ளனர் எனபது போன்ற விபரங்கள் இன்னமும் கிடைக்கப்பெறவில்லை.
நன்றி: அதிர்வு
0 Responses to மட்டக்கிளப்பு மண்தீவு வைத்தியசாலையில் பெரும் தீ விபத்து