மத்தியகிழக்கு தொலைக்காட்சியான அல் ஜசீரா, வவுனியா முகாம்களின் நிலமை பற்றிக் குறிப்பிட்டபோது அதிர்ச்சியான மற்றும் குழப்பமான நிலமையே காணப்படுகிறது என்று தனது ஜூலை மாத வெளியீட்டில் கூறியிருந்தது. கொழும்பு அரசாங்கம் அந்த முகாம்களை "நலன்புரி நிலையங்கள்" என அழைக்கின்ற போதும் உண்மையில் அது "உலகின் மிகப்பெரிய திறந்த வெளிச் சிறை" என தொலைக்காட்சி பகிரங்கமாக கூறியிருந்தது.
அரசாங்கத்தின் கட்டுப்பாடுகளையும் மீறி திரட்டப்பட்ட தகவல்களின் மூலம், வவுனியா முகாம்களில் உள்ள மக்களின் அவலங்களை அச்சஞ்சிகை தெளிவாகத் தொகுத்து வெளியிட்டுள்ளதாக தமிழ்நெட் இணையத்தளம் கூறியுள்ளது.
மெனிக் ஃபார்ம் முகாமில் இடம்பெயர்ந்த மக்கள் சுதந்திரமாக நடமாடமுடியாமை, கல்வி, வாழ்வாதாரம் போன்ற அடிப்படை மனித உரிமை மீறல்கள் உள்ளதோடு மட்டுமல்லாமல்ல் மக்களின் அடிப்படைத் தேவைகளாக உணவு, தங்குமிடம் மற்றும் நீர் தேவைகளைப் பூர்த்திசெய்யும் உரிமைகளும் மறுக்கப்பட்டு வருவதாக போர் முடிவுக்கு வர முன்னரே ஐக்கிய நாடுகள் மனிதாபிமான இணைப்பாளர் கூறியுள்ளதாக அல் ஜசீரா எழுதியிருந்தது.
140,000 பேரை மட்டுமே அடக்கக்கூடிய மெனிக் ஃபார் முகாமின் 6 வலயங்களில், 220,000 மக்களுக்கு மேல தங்கவைக்கப்பட்டுள்ளதாகவும் அவ்வறிக்கை கூறியுள்ளது,
நன்றி: அதிர்வு
0 Responses to தடுப்பு முகாம்களில் தொடரும் அவலங்கள்