சென்னையில் நடந்த கூட்டம் ஒன்றில் இலங்கை எம்.பி. சிவாஜிலிங்கம், சினிமா இயக்குனர்கள் பாரதி ராஜா, சீமான் உள்பட பலர் பேசினார்கள். இந்த கூட்டத்தில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு வைகோ பேசினார்.
இயக்குநர் பாரதிராஜாவின் அலுவலகத்தை அடித்து நொறுக்கியதற்கு ஏற்பாடு செய்தவரே முதலமைச்சர் தான்' என்று வைகோ பேசியதாக 31.5.09 அன்று பத்திரிகையில் செய்தி வெளியானது.
வைகோ பேசிய பேச்சு முதலமைச்சர் கருணாநிதியின் நன்மதிப்பை பாதிக்கும் வகையில் உள்ளது என்று தமிழக அரசு சார்பில் சென்னை மாநகர அரசு வக்கீல் ஷாஜகான் அவதூறு வழக்கை தொடர்ந்துள்ளார்.
அவர் சென்னை செசன்சு கோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில்,
முதலமைச்சர் கருணாநிதி 60 ஆண்டுகளுக்கும் மேலாக பொதுவாழ்வில் உள்ளார். 5-வது முறையாக முதலமைச்சராக பணிபுரிந்து வருகிறார். சிறந்த நிர்வாகியாகவும், சமூக சேவகராகவும், நேர்மையாகவும், உண்மையாகவும் உழைத்து வருகிறார்.
பொதுமக்களிடத்தில் அவருக்கு நல்ல மதிப்பு உள்ளது. ஆனால், வைகோவின் பேச்சானது உண்மைக்கு புறம்பானதாகவும், முதலமைச்சரின் நன்மதிப்பை பாதிக்கும் வகையிலும் உள்ளது. ஆகவே, இந்திய தண்டனை சட்டம் 499 மற்றும் 500-வது பிரிவின் கீழ் வைகோவை தண்டிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.
இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவிருக்கிறது.
நன்றி: நக்கீரன்
பாரதிராஜா அலுவலகத்தை அடித்து நொறுக்க ஏற்பாடு செய்தது கலைஞரா?வைகோ மீது வழக்கு
பதிந்தவர்:
தம்பியன்
09 September 2009



0 Responses to பாரதிராஜா அலுவலகத்தை அடித்து நொறுக்க ஏற்பாடு செய்தது கலைஞரா?வைகோ மீது வழக்கு