Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும் என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ் மாநில பொதுச் செயலாளர் தா.பாண்டியன் வலியுறுத்தியுள்ளார்.

இலங்கை தமிழ் பத்திரிகையாளர் திசைநாயகத்திற்கு, அந்நாட்டு அரசு 20 ஆண்டு சிறைத்தண்டனை விதித்ததை கண்டித்து, தமிழ்நாடு பத்திரிகையாளர்கள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் பேசிய தா.பாண்டியன்,

இலங்கை தமிழர்களை ராஜபக்சே அரசு மின்சாரம் பாய்ச்சப்பட்ட முள்கம்பி வேலிக்குள் அடைத்து சித்ரவதை செய்து வருகிறது. அங்கு சென்றுவந்த ஐ.நா. பிரதிநிதியே இதை கூறுகிறார். ஆனால் இலங்கையில் பயங்கரவாதத்தை ஒழித்துவிட்டோம் என ராஜபக்சே அரசு சொல்கிறது.

இந்திய அரசு இதை கண்டிக்கவில்லை. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர், ராஜபக்சேவின் வெளியுறவுத்துமை அமைச்சராக செயல்பட்டுக்கொண்டிருக்கிறார்.

இலங்கையில் ஏற்பட்டுள்ள அவல நிலையை அமெரிக்கா கண்டிக்கிற அளவுக்குக் கூட இந்தியா கண்டிக்கவில்லை. பிரான்ஸ் நாட்டு எழுத்தாளர்கள், மனித உரிமை ஆர்வலர்கள் கண்டிக்கிற அளவுக்கு கூட மத்திய அரசு கண்டிக்கவில்லை.

நாம் அநியாயத்துக்கு அடிபணிந்துவிடக்கூடாது. இலங்கை அரசின் அட்டூழியங்களை தடுத்து நிறுத்த நாம் கடைசிவரை போராட வேண்டும். இதற்காக தமிழக மக்களை ஒன்று திரட்டும் பணியை செய்ய வேண்டும்.

இலங்கையில் முள்கம்பி வேலிகளை பிரித்து, அங்குள்ள மக்களை அவர்களது சொந்த ஊரில் குடியே அனுமதிக்க வேண்டும். இங்குள்ள இலங்கை தூதரகத்தை அப்புறப்படுத்த வேண்டும். இந்த இரண்டு நடவடிக்கைகளுக்ககாவும் நாம் தொடர்ந்து போராட வேண்டும்.

இதற்காக இந்திய கம்யூனிஸ்ட் கட்சி முழு ஒத்துழைப்பு கொடுக்கும் என்றார்.

நன்றி: நக்கீரன்

0 Responses to தமிழகத்தில் உள்ள இலங்கை தூதரகத்தை அகற்ற வேண்டும்: தா.பாண்டியன்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com