Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

20 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்

பதிந்தவர்: தம்பியன் 08 September 2009

ஈழத்தமிழர்களை விடுவிக்கக்கோரி சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்ற 20 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.

இலங்கையில் 3 லட்சத்துக்கும் மேற்பட்ட தமிழர்கள் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளன. அவர்களுக்கு போதிய அடிப்படை வசதிகள் செய்துகொடுக்கப்படாத்தினால் கடும் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

அவர்கள் அங்கிருந்து வெளியேறுவதற்கும், உறவினர்களை சந்திப்பதற்கும், நிவாரண உதவிகள் பெறுவதற்கும் இலங்கை அரசு அனுமதிப்பதில்லை இதனால் நாள்தோறும் பலர் இறந்து வருகின்றனர்.

இந்த நிலையில் முகாமில் உள்ள 3 லட்சம் தமிழர்களை விடுவிக்கவும், அவர்கள் சொந்த இடங்களுக்கு மீள் குடியேற்றம் செய்யவும், மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியறுத்தி சென்னையில் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க அரசினர் கவின் கலைக்கல்லூரி மாணவர்கள் முடிவுசெய்தனர்.

இதைத்தொடர்ந்து சென்னை பூந்தமல்லிநெடுஞ் சாலையில் உள்ள கல்லூரி வாயிலில் பாண்டியன் என்பவர் தலைமையில் திரண்ட 20க்கும் மேற்பட்ட மாணவர்கள் சாகும்வரை உண்ணாவிரதம் இருக்க முயன்றனர். அங்கு திரண்டிருந்து பெரியமேடு போலீசார் அனுமதி பெறாமல் உண்ணாவிரதம் இருக்க முயன்றதாகக்கூறி 20 மாணவர்களையும் கைது செய்தனர். இந்த சம்பவத்தினால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

0 Responses to 20 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com