Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

பொட்டு அம்மான் இறந்ததாக முன்னர் ஏன் அறிவிக்கவில்லை.
அப்படியானால் கடற்படைத் தளபதி சூசை எங்கே.. தொடர்கின்றன மர்மங்கள்…

பொட்டு அம்மானும் விடுதலைப் புலிகள் தலைவர் வே. பிரபாகரனும் கதிர்காமர் கொலை வழக்கில் இருந்து விடுவிக்கப்படுகிறார்கள் என்று நேற்று சிறீலங்கா நீதிமன்று அறிவித்துள்ளது. இதுவரை காலமும் பொட்டு அம்மானின் மரணம் குறித்து சிறீலங்கா அரசு தெளிவான செய்திகள் எதனையும் வெளியிடவில்லை. அவர் உயிருடன் இருக்கிறார் என்று ஊர்ஜிதமற்ற செய்திகள் பரவியிருந்தன. காரணம் அவருடைய உடலம் இதுவரை எந்த ஊடகங்களிலும் காண்பிக்கப்படவில்லை. அவர் இறந்துவிட்டாரா என்பதை அடையாளம் காண முடியவில்லை என்றும் முன்னர் ஒரு தடவை சிறீலங்கா தரப்பு கூறியிருந்தது. இப்போது எந்த அடிப்படையில் அவர் மரணம் ஊர்ஜிதம் செய்யப்பட்டது ஆச்சரியத்தை உருவாக்கியுள்ளது.

சிறீலங்கா நீதிமன்று தடாலடியாக அவர் இறந்துவிட்டார் என்று கூறியிருப்பது பலத்த சந்தேகங்களை கிளப்புவதாக உள்ளது. அவர் இறந்துவிட்டார் என்பதற்கான சிங்கள அரசின் உத்தியோக பூர்வமான பிரகடனமாகவே இது கருதப்பட இடமிருக்கிறது. அவர் போரில் இறந்தாரா அல்லது தற்கொலை செய்தாரா அல்லது கைதாகி சித்திரவதையில் கொல்லப்பட்டாரா என்ற கேள்விகளை இந்தச் செய்தி கிளப்பியுள்ளது. மேலும் பல தலைவர்கள் கைது செய்யப்பட்டுள்ளார்கள். இவர்கள் உயிருடன் இருக்கிறார்களா இல்லையா என்பதை சிறீலங்கா அரசு வெளிப்படையாக ஊர்ஜிதம் செய்யவில்லை. கைதானவர்கள் நீதி மன்றின் முன் நிறுத்தப்படுவதும், அவர்கள் மீதான குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்படுவதும் சர்வதேச சட்டவிதியாகும். அப்படியிருக்க கைதானவர்களின் பெயர் பட்டியல் வெளி வராமல் மூடு மந்திரமாகவே இருப்பது கவனிக்கத்தக்கது.

மேலும் கடற்படைத்தளபதி சூசை எங்கிருக்கிறார் என்ற செய்தியும் இதுவரை துலக்கமாகவில்லை. அவர் மரணத்தையும் உரியபடி ஊர்ஜிதம் செய்யவில்லை அரசு. அதேவேளை பானு போன்ற தளபதிகளின் புகைப்படங்கள் வெளியானது போல ஏன் மற்றவர்கள் படங்கள் வெளியாகவில்லை என்பது முக்கிய கேள்வியாகிறது.

யூலைக்கலவரத்தில் வெலிக்கடைச் சிறைச்சாலையில் குட்டிமணி, தங்கத்துரை, ஜெகன் உட்பட 52 பேர் கொல்லப்பட்டபோது சிறீலங்கா அந்தப் பெயர்களை வெளியிட்டது. ஆனால் இப்போது கைதானவர்கள் யார், இறந்தவர்கள் யார் என்ற விபரம் நீண்ட நாட்களாக வெளியிடப்படாமல் இருப்பது பெரும் மூடு மந்திரமாக உள்ளது. நேற்று ஜனாதிபதியை சந்தித்த கூட்டமைப்பினரும் இப்படியான கேள்வியொன்றை கேட்டதாக தெரியவில்லை. சமாதானத் தூதுவர் எரிக் சொல்கெய்மிற்கு இவர்கள் பற்றிய பூரண அறிக்கையைப் பெற்று உலகின் முன் வைக்க வேண்டிய தார்மீகக் கடமை இருக்கிறது. அதுபோல ஐ.நா செயலருக்கும் இந்தக் கடமை இருக்கிறது. கைதானவர்கள் மனித உரிமைகளுக்கு முரணாக சித்திரவதை செய்து கொல்லப்படக் கூடிய அபாயமும் இருப்பதால் இந்த விடயத்தில் உலக நாடுகள் முக்கிய கவனம் செலுத்த வேண்டியது அவசியமாகும்.

நன்றி: அலை

0 Responses to பொட்டு அம்மான் பிரபாகரன் மரணமடைந்ததாக நீதிமன்று எதை ஆதாரமாக வைத்து கூறியது.

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com