Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராகக் களமிறங்கும் ஜெனரல் சரத் பொன்சேகா,

தமது அரசியல் பிரவேசத்துக்கான முதலாவது செய்தியாளர் சந்திப்பை விஹாரை ஒன்றிலேயே நடத்துவதற்குத் திட்டமிட்டுள்ளார் என்று கூறப்படுகின்றது. நாளை மறுதினம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டு வரும் இந்தச் செய்தியாளர் மாநாடு பெரும்பாலும் களனி ரஜமகா விகாரையில் நாளை பெறக்கூடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

செய்தியாளர் மாநாட்டுக்காக நான்கு, ஐந்து விஹாரைகள் தேர்ந்தெடுக்கப்பட் டுள்ளன. எனினும், பாதுகாப்பு முன்னேற்பாடு கருதி எந்த விஹாரையில் அது நடைபெறும் என்பதை இறுதி நேரத்திலேயே தீர்மானித்து அறிவிப்பது என சரத் பொன்சேகாவுக்கு நெருங்கிய வட்டாரங் கள் தெரிவித்தன. ஜே.ஆர். ஜெயவர்த் தனா போன்ற அர சியல் தலைவர்கள் தங் கள் அரசியல் பிர வேசத்தையும், பிற முக்கிய அரசியல் நடவடிக்கைகளின் ஆரம்பத்தையும் களனி விஹா ரையிலிருந்து மேற்கொண்டனர் என்பதால் அதே பாணியை பொன்சேகாவும் பின்பற்ற விரும்புகின்றார் என்று கூறப்படுகின்றது.

0 Responses to முதலாவது ஊடக மாநாடு களனி ரஜமஹா விகாரையில்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com