
புதுவருட தினத்தில் முரசுமோட்டையில் விமானக்குண்டு வீச்சு.
*அமைச்சரவையில் திடீர் மாற்றம் .ஊடகத்துறை ஜனாதிபதியை சந்திப்பு.
02 * கிளிநொச்சி படையினர் வசம்.
*விமானப்படை தலைமையகத்தின் முன்னால் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்.
03 *கொழும்பில் பொலிஸ் பதிவு .
07 *புலிகள் மீது அரசாங்கம் தடை.
08 *சண்டேலீடர் பிரதம ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கசுட்டுக்கொலை.
09 *ஆனையிறவு படையினர் வசம். முழுமையான கட்டுப்பாட்டில் ஏ.9 வீதி.
15 *இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்பட வேண்டி தொல். திருமாவளவன் உண்ணாவிரதப் போராட்டம்.
16 *வன்னி மோதல்கள் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஐ.சி.ஆர். சி யின் அவசர நிவாரண சேவைகள் ஆரம்பம்.
17 *140 தமிழர்களை பிரித்தானியா நாடு கடத்தியது.
20 *புதிய பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாகிஸ்தான் இலங்கை இணக்கம். 22 *முல்லைத்தீவில் இடம்பெயர்ந்துள்ள மக்களை பாதுகாப்பு வலயத்துக்குள் வருமாறு படையினர் அழைப்பு.
23 *ரிவிர பத்திரிகையின் பிரதம ஆசிரியர் உபாலி தென்னக்கோன், மற்றும் மனைவி மீது தாக்குதல்.
24 *முல்லைத்தீவு கல்மடுக்குள அணை புலிகளால் தகர்ப்பு.
25 * 13 வருடங்களின் பின் முல்லைத்தீவு நகருக்குள்படையினர் பிரவேசம்.
25 * இந்திய வெளிவிவகார அமைச்சர் பிரணாப் முகர்ஜி இலங்கை விஜயம்.
29 * மோதல் பிரதேசத்தில் சிக்குண்டுள்ள மக்களை விடுவிப்பதற்கு புலிகளுக்கு 48 மணித்தியால காலக்கெடு.
பெப்ரவரி
01 * இலங்கையில் போர்நிறுத்தம் கோரி தமிழகத்தில் அரசியல் கட்சியினர் மற்றும் கல்லூரி மாணவர்கள் போராட்டம். 04 * சுதந்திர தினம். காலி முகத்திடலில் கோலாகல கொண்டாட்டம்.
05 * ஐ.சி.ஆர்.சி. தலைமையகம் மீது இனந்தெரியாதோர் தாக்குதல்.
08 * முல்லைத்தீவு, தர்மபுரம் இடைத்தங்கல் முகாமில் தற்கொலைக் குண்டுத் தாக்குதல்.
12 * முல்லைத்தீவில் புதிய பாதுகாப்பு வலயம் பிரகடனம்.
15 * மத்திய மற்றும் வடமேல் மாகாண சபைத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி. 20 * புலிகளின் விமானங்கள் கொழும்பில் தாக்குதல். இறைவரித் திணைக்களக் கட்டிடம் சேதம். அவ் விமானங்கள் படையினரால் சுட்டு வீழ்த்தப்பட்டன.
* அம்பலவன்பொக்கøண பிரதேசம் படையினர் வசம்.
26 * பத்திரிகை ஆசிரியர் வித்தியாதரன் குற்றப்புலனாய்வுப் பொலிஸாரால் கைது.
* கோல்டன் கீ நிதி மோசடியில் கொத்தலாவலவுக்கு விளக்கமறியல்.
மார்ச்
* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷநேபாளம் விஜயம்..
02 * படையினரின் போக்கு வரத்து நடவடிக் கைகளுக்காக ஏ 9 வீதி திறப்பு. .
03 * இலங்கை கிரிக்கெட் அணியினர் மீது பாகிஸ்தானில்ஆயுததாரிகள் தாக்குதல். .
* புதுக்குடியிருப்பு சந்தி படையினர் வசம். .
06 * வன்னியில் சிக்கியுள்ள மக்களை பாதுகாப்பாக அழைத்துவர இரு பாதைகள் அறிவிப்பு. .
08 * 7கோடி பெறுமதியுள்ள மருந்துப் பொருட்களுடன் இந்திய மருத்துவக்குழு இலங்கை வருகை 09 * இன ஒருமைப்பாடு மற்றும் மறு சீரமைப்பு அமைச்சரவை அந்தஸ்து அற்ற அமைச்சராக விநாயகமூர்த்தி முரளிதரன் (கருணா அம்மான்) பதவி ஏற்பு. * ஏ9 வீதியூடாக யாழ் குடாநாட்டுக்கு முதன்முறையாக உணவுப் பொருட்கள் அனுப்பிவைப்பு. .
10 * அக்குரஸ்ஸ ஜும்ஆ பள்ளிவாசலுக்கருகில் குண்டு வெடிப்பு, 15 பேர் பலி. அமைச்சர் மஹிந்த விஜயசேகர உட்பட 60 பேர் காயம். 13 * திருமலையில் கப்பம் கேட்டு 6 வயது சிறுமி வர்ஷா படுகொலை..
18 * சுடரொளி ஆசிரியர் வித்தியாதரனுக்கு 3 மாத தடுப்புகாவல் உத்தரவு. 23 * யாழ் தேவி ரயில் சேவை அங்குரார்ப்பணம்
மார்ச்
* உலக செல்வந்தர் பட்டியலில் இலங்கை தமிழர்களான ஆனந்தகிருஷ்ணன் மற்றும் ராஜ் ராஜரட்ணம் ஆகிய இருவரும் உள்ளடக்கம். 02 * ஐ.நா.வின் இடம்பெயர்ந்தவர்களுக்கான மனித உரிமைகள் விவகார செயலாளரின் பிரதிநிதிபேராசிரியர் வோல்டர் கெலின் இலங்கை விஜயம். அகதி முகாம்களுக்கும் பயணம். ..
05 * பாதுகாப்பு வலயம் தவிர்ந்த சகல பகுதிகளும் படையினர் வசம். புலிகளின் 7 தலைவர்கள் உட்பட 250பேர் பலி…
* கல்லடி பொலிஸ் போதனா பயிற்சிக் கல்லூரி அத்தியட்சர் துப்பாக்கிச் சூட்டில் பலி. ..
08 * இலங்கையில் போர்நிறுத்தம் ஏற்படவேண்டி லண்டன் மற்றும் டென்மார்க்கில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 90 பேர் கைது. 10 * இலங்கை அரசு உடனடியாக போர் நிறுத்தத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஈழவேந்தன் உண்ணாவிரதம் ஆரம்பம். 13 * சித்திரை புத்தாண்டை முன்னிட்டு 48 மணி நேரம் மோதல் தவிர்ப்பு…
15 * கிழக்கு உட்பட நான்கு மாகாணங்களில் நில நடுக்கம். ..
16 * ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ முதன்முறையாக கிளிநொச்சி விஜயம். ..
19 * விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் எனது நண்பன் என முதல்வர் கருணாநிதி அறிவிப்பு. 20 * பாதுகாப்பு வலயத்துக்குள் தற்கொலைத் தாக்குதல்கள்…
22 * இலட்சக்கணக்கான பொதுமக்கள் இராணுவ கட்டுப்பாட்டுப் பகுதிக்குள் வருகை. ..
* தமிழீழ விடுதலை புலிகளின் முக்கிய உறுப்பினர்களான தயாமாஸ்டர்,ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் இராணுவத்திடம் சரண். ..
23 * இலங்கையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கென 6ஆறரை கோடி பெறுமதியான பொருட்கள் இந்தியாவிலிருந்து அனுப்பிவைப்பு 24 * சுடரொளி பத்திரிகை பிரதம ஆசிரியர் வித்தியாதரன் இரு மாதங்களின்பின் விடுதலை…
* இந்திய பாதுகாப்பு ஆலோசகர் நாராயணன் வெளிவிவகார அமைச்சின் செயலாளர் சிவ்சங்கர்மேனன் இலங்கை விஜயம். ..
25 * புலிகளை மூன்றாம் தரப்பினரிடம் சரணடையுமாறு கோரிக்கை அமெரிக்கா, ஏற்க முடியாது என கோத்தபாயா அறிவிப்பு. ..
* இரு தரப்பினரும் யுத்தத்தை நிறுத்த வேண்டும் என ஜி 8 நாடுகள் கூட்டாக கோரிக்கை. ..
* ஐ.நாவின் மனிதாபிமான மற்றும் உதவி இணைப்பாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கைக்கு திடீர் விஜயம். ..
ஏப்ரல் 25
* மேல் மாகாண சபை தேர்தலில் ஐ.ம.சு.மு. மகத்தான வெற்றி ..
* இலங்கை பிரச்சினை தொடர்பில் ஜெனீவாவில் மனிதச் சங்கிலிப் போராட்டம். ..
26 * திருமலையில் மீனவர் உட்பட 9 தமிழர்கள் சுட்டும் வெட்டியும் படுகொலை…
27 * இலங்கையில் உடனடி யுத்த நிறுத்தம் வேண்டி கருணாநிதி உண்ணாவிரதம். * மோதலில் கனரக ஆயுதங்களை பயன்படுத்த வேண்டாம் என படையினருக்கு அரவு உத்தரவு..
29 * பிரிட்டன், பிரான்ஸ் வெளியுறவு அமைச்சர்கள் வவுனியா நலன்புரி முகாம்களுக்குவிஜயம்…
மே
*மனிதாபிமான நெருக்கடி குறித்து ஆராய ஐந்து பேரடங்கிய பிரிட்டன் குழு இலங்கை விஜயம். ..
06 * மக்களுக்குத் தேவையான உணவு, மருந்துகளை அனுப்பு வதற்கு மோதல் இடைநிறுத்தம் அவசியம் என ஐ.நா.செயலாளர் கோரிக்கை. ..
08 * பாதுகாப்பு வலயத்தின் எல்லை களை மீள்நிர்ணயம் செய்து புதியபாது காப்புவலயம் பிரகடனம். *மாளிகாவத்தை ஜும்ஆ பள்ளிவாசலுக்கருகில் துப்பாக்கிச் சூடு. ..
10 * திருமலையில் கைது செய்யப்பட்ட ‘சனல்4′ தொலைக்காட்சி ஊடகவியலா ளர்கள் மூவரும் நாடு கடத்தல்…
14 *மனிதாபிமான நெருக்கடிகள் குறித்து ஐ.நா.பாதுகாப்பு சபையில்கடும் விசனம். ..
15* மோதல் இடம்பெறும் பகுதிகளில் மேற்கொண்டு வந்த மனிதாபிமானப் பணிகளை சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தற்காலிகமாக இடைநிறுத்தம். 17 *மண்ணை தொட்டு வணங்கி ஜனாதிபதி நாடுதிரும்பினார். ..
*முல்லைத்தீவு வெள்ளமுள்ளிவாய்க்கால் பகுதியில் சிக்கியிருந்த பொதுமக்கள் அனைவரும் இராணுவ கட்டுப்பாட்டுப் பிரதேசத்துக்கு வெளியேற்றம். (2இலட்சத்து 49ஆயிரத்து 987பேர் பதியப்பட்டுள்ளனர்.)..
* வைத்தியர்களான வரதராஜா, சத்தியமூர்த்திஉட்பட 6 பேர் கட்டுப்பாட்டு பகுதிக்கு வருகை. மேலதிக அரச அதிபர் பார்த்திபனும் முகாமில். * படையினரின் தாக்குதல்களில் விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் கொல்லப்பட்டதாகவும் அவரது மகன் சார்ள்ஸ் அன்ரனி, புலித்தேவன், நடே சன், ரமேஷ் ஆகியோரின் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும் அரசாங்கம் அறிவிப்பு. ..
* யுத்தம் முழுமையாக நிறைவடைந்து விட்டது. முப்படை தளபதிகளும் ஜனாதிபதிக்கு அறிவிப்பு. 19 * பிரபாகரனின் சடலம் மீட்பு. ..
* படையினரின் வெற்றி குறித்து ஜனாதிபதி பாராளுமன்றத்திலிருந்து நாட்டு மக்களுக்கு உரை.
20 * வன்னிப் போர் முடிவுற்றமை வெள்ளமுள்ளிவாய்க்காலில் முரசு கொட்டி அறிவிப்பு.
* தமிழ் தேசிய கூட்டமைப்பின் எம்.பி.பத்மநாதன் சென்னையில் மாரடைப்பால் மரணம்.
22 * படையினரை கௌரவிக்கும் வகையில் கொழும்பில் பேரணி. தேசிய கொடிகளை ஏந்தி கோஷம்.
* பிரபாகரன் உள்ளிட்ட 300 புலி உறுப்பினர்களின் சடலங்கள் முல்லைத்தீவில் படையினரால் அடக்கம்.
23 * ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் பான் கி மூன் இலங்கை விஜயம்.
24 * துட்டகைமுனுவின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்த ஜனாதிபதி ஜயஸ்ரீ மகா போதியிலும் தரிசனம்.
28 * 4ஆவது ஈழப்போரை வெற்றி நிகழ்வு இராணுவ ஈழப்போரை வெற்றி நிகழ்வு இராணுவ தலைமையகத்தில் இடம்பெற்றது.
ஜூன்
01 * உழைக்கும் பத்திரிகையாளர் சங்கத்தின் செயலாளரும்டகவியலாளருமான போத்தல ஜயந்த மீது தாக்குதல். 03 * யுத்த வெற்றி தொடர்பான தேசிய விழா காலி முகத்திடலில் ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
06 * 20 வருடங்களுக்குப் பின்னர் யாழ்.தேவி ரயில் கொழும்பிலிருந்து தாண்டிக்குளம் வரை பயணம்.
* பிரதம நீதியரசர் சரத் என் சில்வா ஓய்வு.
08 * 32ஆவது பிரதம நீதியரசராக ஜே.ஏ.என்.த சில்வா பதவியேற்பு.
10 * இலங்கைக்கு விஜயம் மேற்கொண்ட கனடா நாட்டு பாராளுமன்ற உறுப்பினர் பொப்ரே விமான நிலையத்திலிருந்து திருப்பி அனுப்பப்பட்டார்.
14 * ஜனாதிபதி தலைமையிலான தூதுக்குழு மியன்மாருக்கு விஜயம்.
19 * யாழ். குடா நாட்டு கடற்பரப்பில் 24 மணி நேரமும் மீன் பிடிப்பதற்கு அனுமதி.
25 * யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் உதயன், தினக்குரல், வலம்புரி பத்திரிகைகள் ஆயுததாரிகளால் தீக்கிரை.
யூலை
03 * தோட்ட தொழிலாளர்களால் முன்வைக்கப்பட்ட 500 ரூபா சம்பள உயர்வு கோரிக்கை முதலாளிமார் சம்மேளனத்தால் நிராகரிப்பு. அனைத்து கொடுப்பனவுகளும் உள்ளடக்கப்பட்டு 405 ரூபாவுக்கு இணக்கம்
09*பிரபாகரன் மரணம் குறித்து உத்தியோக பூர்வ அறிவித்தலை எதிர்பார்ப்பதாக இந்தியா அறிவிப்பு.
12* கூட்டுப்படைகளின் பிரதானியாக சரத் பொன்சேகா பதவி உயர்வு.
* இராணுவ தளபதியாக ஜகத் ஜயசூரியவும் கடற்படை தளபதியாக திசõரசமரசிங்கவும் நியமனம்.
* வடமாகாண ஆளுனராக மேஜர் ஜெனரல் ஜீ.ஏ. சந்திர சிறியும் மாலைதீவு தூதுவராக டிக்ஸ்ஸன்தேலவும் ஜனாதிபதி முன்னிலையில் பதவியேற்பு.
19 * யாழ்.படைத்தளபதியாக மேஜர் ஜெனரல் சில்வாவும் நெடுஞ்சாலை அமைச்சின் செயலாளராக வசந்த கருணாகொடவும் நியமனம்.
20 * சர்வதேச செஞ்சிலுவை சங்கம் கிழக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றம்.
22 * யாழ் கொழும்பு பயணிகள் பஸ் சேவை ஏ9 வீதி யூடாக மீண்டும் ஆரம்பம். * காலி மாநகரசபை எதிர்க்கட்சித் தலைவர் துஷ்யந்த செனவிரட்ன சுட்டுக்கொலை.
24 *உடதலவின்ன படுகொலை வழக்கில் மரணதண்டனை விதிக்கப்பட்ட 5இராணுவ வீரர்கள் உயர்நீதிமன்றத்தால்
விடுதலை. 27 * சிறைத்தண்டனை அனுபவித்த படையினர் 1893 பேருக்கு பொது மன்னிப்புடன் விடுதலை.
ஆகஸ்ட்
01 * கிளிநொச்சி அரச அதிபர் நாகலிங்கம் வேதநாயகம் பயங்கரவாத புலனாய்வு பிரிவினரால் கைது. 06 * அமுத விழாவை நோக்கி வீரகேசரியின் பயணம். 80 ஆவது ஆண்டில் காலடி வைத்துள்ளது. * குமரன் பத்மநாதன் (கே.பி.) கைது
செய்யப்பட்டுள்ள தாக அரசாங்கம் அறிவிப்பு.
10 * ஊவா மாகாணசபை, யாழ் மாநகரசபை தேர்தலில்ஆளும் ஐ.ம.சு.மு. அமோக வெற்றி. 13 * மொரட்டுவ, அங்குலான பகுதிகளில் இரு இளைஞர்கள் பொலிஸாரால் சுட்டுக் கொலை. பிரதேசத்தில் பெரும் பதற்றம். பொலிஸார் மீதும் பெரும் தாக்குதல். 15 * மடு மாதா ஆலயத்தின் ஆவணித்திருவிழா.இலட்சக்கணக்கான மக்கள் பங்கேற்பு.
* மஸ்கேலியாவை சேர்ந்த இரு தமிழ் யுவதிகள் கொலை.
17 * மூன்று மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான 600 தொன் நிறையுடைய உற்பத்திப் பொருட்களை இந்தியா இலங்கைக்கு நன்கொடையாக வழங்கியது. 20 * வன்னியிலிருந்து 288938 பேர் இடம்பெயர்ந்துள்ளதாக அரசு அறிவிப்பு.
31 * ஊடகவியலாளர் ஜே.எஸ். திஸ்ஸநாயகத்திற்கு கொழும்பு மேல் நீதிமன்றம் 20 வருட கடூழிய சிறைதண்டனை விதித்து தீர்ப்பளித்தது.
செப்டெம்பர்
01* தயா மாஸ்டர், ஜோர்ஜ் மாஸ்டர் ஆகியோர் பிணையில் விடுவிப்பு.
28 * திறைசேரியின் செயலாளராக பி.பி.ஜயசுந்தர
ஒக்டோபர்
03 * இராணுவத்தின் 60ஆவது ஆண்டு நிறைவையொட்டிவிசேட நிகழ்வுகள். கொழும்பு பண்டாரநாயக்கா சர்வதேச ஞாபகார்த்த மண்டபத்தில் இராணுவக் கண்காட்சி. 10 * தமிழக முன்னாள் அமைச்சர் டி.ஆர். பாலு தலைமையில் அந்நாட்டு பாராளுமன்ற உறுப்பினர்கள்குழு இலங்கைக்கு விஜயம். 11 * தென் மாகாணசபைத் தேர்தலில் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி அமோக வெற்றி.
* இலங்கைக்கு விஜயம் செய்துள்ள தமிழக எம்.பி.க்கள்குழு யாழ்ப்பாணம் விஜயம்.
15 * எட்டாவது ஆசிய ஒத்துழைப்பு அமைப்பின்அமைச்சர்கள் மட்ட மாநாடு கொழும்பில்நடைபெற்றது.
17 * இலங்கை அகதிகளுடன் அவுஸ்திரேலியா பயணித்த படகினை விடுவிக்கக் கோரி உண்ணாவிரதம். 20 * கோடீஸ்வர வர்த்தகர் ராஜ் ராஜரட்ணம் கைது
21 * அம்பேபுஸ மற்றும் பூந்தோட்டம் புனர்வாழ்வுமுகாம்களிலிருந்து புனர்வாழ்வு பெற்று வந்த 168 முன்னாள் போராளிகள் கொழும்பு இந்துக் கல்லூரிக்கு மாற்றம். * தெஹிவளை சந்தியில் நிர்மாணிக்கப்பட்ட மேம்பாலம் ஐனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவால் திறப்பு.
26 * விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அச்சக உரிமையாளர் யசீகரனும் அவரது மனைவி மலர்மதியும் விடுதலை.
30 * பம்பலப்பிட்டி கடற்பகுதியில் பொலிஸ் கான்ஸ்டபிளால் தாக்கப்பட்டு இளைஞன் படுகொலை. நவம்பர்
03 * அரசியல் கட்சிகள் ஒன்றிணைந்து பொது கூட்டமைப்பான ஐ. தே. மு. உதயம்.
09 * அவுஸ்திரேலிய வெளிவிவகார அமைச்சர் ஸ்ரீபன் ஸ்மித் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான குழுவுடன் சந்திப்பு.
11 * யாழிலிருந்து ஏ9 வீதியூடாக அரச சொகுசு பஸ் சேவை ஆரம்பம்.
12 * முப்படைகளின் தலைமை அதிகாரி ஜெனரல் சரத் பொன்சேகா ராஜினாமா. திடீர் முடிவுக்கு 17 காரணங்கள் தெரிவித்து கடிதம்.
* மியன்மார் தலைவர் தன்சூவின் இலங்கை விஜயம். 13 * கூட்டுப்படைகளின் தலைமை அதிகாரி பதவியிலிருந்து உடன் விலகிக்கொள்ள பொன்சேகாவிற்கு ஜனாதிபதி அனுமதி.
* ஏ9 வீதியூடான பயணிகள் போக்குவரத்து நடைமுறைவிதிகள் தளர்வு. * மகசின் சிறையில் தமிழ், சிங்கள அரசியல் கைதிகளிடையில் மோதல்.
16 * ஜெனரல் சரத் பொன்சேகா ஓய்வு. ஜனாதிபதியை சந்தித்து பிரியாவிடைபெற்றார்.
* கூட்டுப்படைகளின் பதில் பிரதானியாக விமானப்படைத் தளபதி ரொஷான் குணதிலக நியமிப்பு. 17 * ஐ.நாவின் மனிதாபிமான பணிகளுக்கான உதவிஆணையாளர் ஜோன் ஹோம்ஸ் இலங்கை விஜயம். 18* யாழ்.குடாநாட்டிலிந்து வெளியிடங்களுக்கு செல்வதற்கான பாதுகாப்பு அனுமதி நீக்கம்.
20 * இராணுவ நலத்திட்ட அதிகாரசபையின் தலைவர் பதவியிலிருந்து அனோமா பொன்சேகா (ஜெனரல்பொன்சேகாவின் பாரியார்) ராஜினாமா.
21 * வவுனியா நலன்புரி நிலையத்திற்கு ஐனாதிபதியின் ஆலோசகரும் எம்.பி.யுமான பஷில் ராஜபக்ஷ விஜயம். 22 * ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு உரிய பாதுகாப்பு வழங்கப்படவேண்டும் என ஜே.வி.பி. கோரிக்கை.
23 * லங்கா பத்திரிகை ஆசிரியரிடம் இரகசிய பொலிஸார் விசாரணை.
* இலங்கையின் புதிய இந்தியத் தூதுவராக அசோக்கே.காந்த் ஜனாதிபதி முன்னிலையில் நியமனம். 24 * படகுகளில் அவுஸ்திரேலியாவிற்கு செல்ல முயன்ற 142 இலங்கையர் கைது.
25 * இந்தியத் தூதுவர் அசோக் கே.காந்த் யாழ்ப்பாணம் விஜயம்.
26 * நீண்ட காலமாக மூடப்பட்டிருந்த காலி முகத்திடல் வீதிமக்கள் பாவனைக்கு திறப்பு. * பொது வேட்பாளர் பொன்சேகாவிற்கு சுதந்திரக்கட்சிமக்கள் பிரிவு ஆதரவு.
* ஊடகவியலாளர் திஸநாயகத்தை விடுதலை செய்யுமாறு ஒபாமா கடிதம்.
29 * அன்னப்பறவைச் சின்னத்தில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடப் போவதாக சரத் பொன்சேகா அறிவிப்பு.
டிசம்பர்.
01 * வவுனியா நலன்புரி முகாமிலுள்ள மக்கள் வெளியே சென்று வருவதற்கு அனுமதி. * புலிகளின் மூன்று கப்பல்கள் இலங்கைக்கு கொண்டு வரப்படுவதுடன் 600 வங்கிக் கணக்குகளையும் அரசுடை மையாக்க நடவடிக்கை என்கிறது அரசாங்கம். 03 * ஐனாதிபதி தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேசகாவிற்கு ஆதரவு வழங்குவதாக ஜனநாயக மக்கள் முன்னணி அறிவிப்பு. 05 * இலங்கையில் இடம்பெற்ற மனித உரிமைகள் குறித்து அயர்லாந்தின் டப்ளின் நகரில் விசாரணை நடைபெறும் என அறிவிப்பு.
* ஐ.தே.க. வின் 64 ஆவது வருடாந்த மாநாடு.
06 * காலி சிவன் கோவிலில் கோடிக்கணக்கான ரூபா பெறுமதியான 17 விக்கிரகங்கள் கொள்ளை.
07 * ஐ.தே.கட்சியை சேர்ந்த எஸ்.பி. திஸாநாயக்க ஸ்ரீ.சு.கட்சியுடன் இணைவு.
09 * வவுனியா செட்டிகுளம் மெனிக்பாம் நலன்புரி முகாமிற்கு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ விஜயம்.
10 * ஜனாதிபதி தேர்தலுக்கு பின் தமிழ் மக்களுக்கு சம
உரிமை வழங்கும் வகையில் சட்டதிருத்தம். இந்தியாவிடம் இலங்கை உறுதி.
14 * வன்னியில் இடம்பெற்ற இறுதிக்கட்ட போர் நடவடிக்கையின் போதுசேவையாற்றிய இராணுவ வீரர்கள் கௌரவிப்பு. 14 * ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பு மனுவில் கைச் சாத்து.
* கிழக் கில் தொடர்மழையால் பெரு வெள்ளம். பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் கடும் பாதிப்பு. 16 * இந்தியாவின் பிரபல பின்னணிப் பாடகி ஆஷா போஸ்லே ஜனாதிபதிமஹிந்தராஜபக்ஷவை சந்திப்பு.
17 * ஜெனரல் சரத் பொன்சேகாவிற்கு அர்ஜுணரணதுங்க எம்.பி. ஆதரவு வழங்குவதாக அறிவிப்பு.
* ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, சரத்பொன்சேகா உட்பட 22 பேர் தேர்தல் களத்தில் குதிப்பு.
21 * புலிகளுக்கு சொந்தமான ஆயுதக்கப்பலான பிரின்ஸ்ஸஸ் கிரிஸ்டினாகடற்படையினரால் கொழும்பு துறைமுகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
22 * ஊடகவியலாளர் திஸநாயகத்திற்கு பிணை வழங்க சட்டமா அதிபர் இணக்கம்.
27 * நிதி மோசடி குற்றச்சாட்டில் தம்பர அமிலதேரர் கைது.
0 Responses to 2009 ல் இலங்கையில் நடைபெற்ற முக்கிய சம்பவங்கள்