Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

மகிந்தவின் மகன் நமல் ராசபக் தனது தந்தையின் வெற்றிக்காக ரூபா 325 கோடி செலவில் விளம்பரம் செய்து வருகின்றமை கண்டு பிடிக்கப்பட்டுள்ளது.

எந்தவொரு வியாபாரமோ அல்லது தொழிலோ செய்யாத மகிந்தவின் மகனுக்கு இந்தளவு பணம் எங்கிருந்து கிடைத்தது என எதிரணிகள் கேள்வி கேட்க ஆரம்பித்துள்ளனர். இந்த விளம்பரத்தினை நமல் ராசபக்சவின் "A Tomorrow for Youth" என்ற அமைப்பின் ஊடாகவே செய்யப்படுகின்றது.

இந்த அமைப்பிற்கு போரில் பாதிகப்பட்ட மக்களுக்கு என அரசாங்கத்தினாலும் , வசந்தம் திட்டத்தின் கீழும் பல நூறு கோடி ரூபாய்கள் புவர்வாழ்வு திட்டங்களுக்கு ஒதுக்கப்பட்டிருந்தன. ஆனால் விளையாட்டு கழகங்களுக்கு "பந்தும்" "நெற்றும்" வாங்கி கொடுத்ததை தவிர வேறெந்த பாரிய திட்டங்களையும் இவர் முன்னெடுகவில்லை என்றும் கூறப்படுகின்றது.

வேலை இல்லா ஒரு நபருக்கு தந்தைக்காக ஒரு நாளைக்கு 72 தடவை ஏழு தொலைகாட்சிகளில் விளம்பரம் செய்வதற்கெ ஏது பணம் என ஊடகவியலாலர்களும், ஊழல் தடுப்பு ஆர்வலர்களும் கேள்வி எழுப்பியுள்ளனர்.



நன்றி: சங்கதி

0 Responses to தந்தை மகிந்தவுக்கு மகன் நமல் ராசபக்‌ச 325 கோடி ரூபா செலவில் விளம்பரம்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com