அரசாங்கமும் எதிர் கட்சிக் கூட்டமைப்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெறும் நோக்கிலான நகர்வுகளை ஆரம்பித்துள்ளன.
இதேவேளை இந்தியாவும் தனக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக தனது நலன் சார் அரசியலை முன்நகர்த முயல்வதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்குள் குழப்பங்கள் ஏற்பட்டுள்ளதாகவும் பிளவுபடும் நிலை காணப்படுவதாகவும் சிங்கள மற்றும் ஆங்கில ஊடகங்கள் தொடர்சியான பரப்புரைகளை மேற்கொண்ட வருகின்றன.
இதன் மூலம் இலங்கையில் வாழும் தமிழ் மக்களும் புலம் பெயர்ந்து வாழும் மக்களும் குழப்பமடைவார்கள் என்றும் அதன் மூலம் தமிழ் தேசிய கூட்டமைப்பின் நிலைப்பாட்டிற்கு தமிழ் மக்களின் ஆதரவை குறைக்க முடியும் என்றும் சிங்கள அரசியல் தரப்புகள் நம்பிக்கை கொண்டுள்ளன.
இதேவேளை தமிழ் தேசிய கூட்டமைப்பானது தமிழ் மக்கள் தமக்கு வழங்கிய ஆணையை மதித்து அதற்கு அமைவான தெளிவான நிலைப்பாட்டை எடுக்க வேண்டும் என்று புத்திஜீவிகள் வலியுறுத்தியுள்ளனர்.
0 Responses to தமிழ் தேசிய கூட்டமைப்பினை பிளவுபடுத்தும் சதி முயற்சியில் இரு பிரதான கட்சிகள்