சிறிலங்கா அரச தலைவர் மகிந்த ராஜபக்ஷ கடும் மனஉளைச்சலுக்கு உள்ளாகியிருப்பதால் அவரை உடனடியாக விசேட மனோ வைத்திய நிபுணரின் சிகிச்சைக்கு உட்படுத்துமாறு இருதய நோய் சம்பந்தமான நிபுணர் மருத்துவர் வஜிர தென்னகோன் ஆலோசனை வழங்கியிருப்பதாக அலரி மாளிகைத் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.தற்போது மகிந்தவின் இரத்த அழுத்தம் அதிகரித்திருப்பதால் அவரது தனிப்பட்ட மருத்துவரான ரொஹானினால் இந்த விசேட வைத்திய நிபுணர் வஜிர தென்னகோன் அலரி மாளிகைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
மிகிந்தவுக்கு மேற்கொள்ளப்பட்ட மருத்துவ பரிசோதனைக்குப் பின்னர் அவர் அதிகமான உளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக வஜிர தென்னகோன் கண்டறிந்தார். இந்த நிலைமையில், அநாவசியமான பிரச்சினைகளை மகிந்தவுக்கு தெரிவித்து அவரைப் பதற்றத்திற்கு உள்ளாக்க வேண்டாம் எனவும் வஜிர தென்னகோன் தெரிவித்துள்ளார்.



0 Responses to மகிந்தவுக்கு தீராத மன உளைச்சல்