Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்று இடம்பெற்ற பாடசாலை மாணவர்களுக்கான இலவச பாடநூல் கையளிக்கும் நிகழ்விற்கு

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ வருவார் என்று மகஜர்களைக் கையில் ஏந்திக் காணாமல் போனோரின் உறவினர்கள், பெற்றோர்கள் பெரும் ஏமாற்றத்துடன் திரும்பினர்.

பாடசாலை மாணவர்களின் அடுத்த ஆண்டுக்கான இலவச பாடநூல்களைக் கையளிக்கும் நிகழ்வு யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ கலந்து கொள்வதாக முன்னர் அறிவிக்கப்பட்டிருந்தது. அதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக மேற்கொள்ளப்பட்டன. பின்னர் இந்த நிகழ்வில் ஜனாதிபதி கலந்துகொள்ளமாட்டார் அதற்குப் பதிலாக அவரின் ஆலோசகரும், நாடாளுமன்ற உறுப்பினருமான பசில் ராஜபக்ஷ இந்த நிகழ்வில் கலந்துகொள்வார் என்று தெரிவிக்கப்பட்டது.

இதனை அறிந்து கொண்ட யாழ். மாவட்டத்தில் காணாமற் போனோரின் பெற்றோர்கள் மற்றும் உறவினர்கள் என நூற்றுக்கும் மேற்பட்டோர் தமது உறவுகளை கண்டுபிடித்துதருமாறு கோரிக்கை அடங்கிய மகஜர்களுடன் யாழ்.வேம்படி மகளிர் கல்லூரியில் நிகழ்வு நடந்த இடத் திற்கு வருகை தந்தனர். ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, ஆலோ சகர் பசில்ராஜபக்ஷ ஆகிய இருவரில் ஒரு வரும் வருகை தராமையால் காணாமற் போனோரின் பெற்றோர்கள், உறவினர்கள் ஏமாற்றத்துடன் வீடு திரும்பியதை அவதானிக்க முடிந்தது.

0 Responses to மஹிந்த வருவாரென மகஜருடன் காத்திருந்து ஏமாந்து திரும்பிய காணாமற்போனோரின் பெற்றோர்

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com