ஜனாதிபதித் தேர்தலில் ஈடுபடும் எதிர்க் கட்சியினரை அடக்குவதற்காகவே அரசு இந்த அவசரகாலத் திட்டத்தை பயன்படுத்தத் திட்டமிட்டுள்ளது என்று ஐக்கிய தேசியக் கட்சியின் லக்ஷ்மன் செனவிரட்ன எம்.பி. நேற்று முன்தினம் நாடாளுமன்றத்தில் கூறினார். நாடாளுமன்றத்தில் நேற்று முன் தினம் இடம்பெற்ற அவசரகாலச் சட்ட நீடிப்பு பிரேரணை மீதான விவாதத் தில் கலந்துகொண்டு உரையாற்றுகையில் அவர் மேலும் கூறியவை வருமாறு கே.பி. பிடிபட்டு பல மாதங்கள் ஆகிவிட்டன. அவர் இருக்கிறாரா? இல்லையா என்பது யாருக்கும் தெரியாது. அவருக்கு என்ன நடந்தது? அவர் இரகசிய பொலி ஸாரின் கட்டுப்பாட்டில் உள்ளாரா? புலி களிடம் இருந்து கைப்பற்றப்பட்ட கோடிக் கணக்கான பணப் பெறுமதி வாய்ந்த சொத்துக்களுக்கு என்ன நடந்தது எந்தப் பதிவும் இல்லை.
யுத்தம் முடிவடைந்த பின்பு அவசரகாலச்சட்டம் நடைமுறையில் உள்ளது. இந்த ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சி யினரைக் கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அவசர காலச்சட்டம் பயன்படுத்தப் படும்; பயங்கரவாதத்தைத் தடுப்பதற்காக அல்ல.
தற்போது எதிர்க்கட்சியின் பொது வேட்பாளரை அப்போது அரசு புகழ்ந்தது. இப்போது அவர் மீது அரசு, அரச ஊடகங் கள் ஊடாக தொடர்ந்து சேறு பூசுகின்றது என்றார்.

0 Responses to தேர்தலில் எதிர்க்கட்சிகளை அடக்கவே அவசரகாலச்சட்டம்