Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சரத் பொன்சேகா எதிர்க்கட்சியில் பொது வேட்பாளராகப் பெயரிடப்பட்டுள்ளதால் அவர் கோரியுள்ள பாதுகாப்பை வழங்க வேண்டாம் எனத் தெரிவித்து

மனு ஒன்று உயர்நீதிமன்றத்தில் கடந்த 7ஆம் திகதி தாக்கல் செய்யப்பட்டது.

30 காரணங்களைச் சுட்டிக்காட்டி ஷைலாராம விகாராதிபதி ஷாஸ்த்ரபதி ஓமாரே கஸ்ஸப்ப தேரரால் இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
தனக்கு வழங்கப்பட்ட பாதுகாப்பை மேலும் அதிகரிக்குமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த அடிப்படை உரிமை மனு வில் தலையிடுவதற்கு இந்த மனுவின் மூலம் அனுமதி கோரப்பட்டுள்ளது. நீதிமன்றத்திடம் கோரியுள்ளவாறு ஜெனரல் பொன்சேகாவுக்குப் பாதுகாப்பு வழங்கப்பட்டால் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தினருடன் அவர் தனது தேர்தல் இலக்கை நோக்கி செயல்படுவார். தேர்தலுக்கு அது தடையாக இருப்பதுடன் வன்முறைகள் ஏற்படுவதற்கும் காரணமாக அமையக்கூடிய வாய்ப்பு இருக்கிறது.

மேலும், ஜெனரல் சரத் பொன்சேகா நீதிமன்றத்தின் அனுதாபத்தைப் பெற்றுக் கொண்டு அவரது பதவியையும் பயன்படுத்தி தனது அரசியல் நோக்கத்தை நிறைவேற்ற முயற்சித்துள்ளார் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த மனு நாளை வெள்ளிக்கிழமை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ளப்பட வுள்ளது எனத் தெரியவருகிறது.

0 Responses to பொன்சேகாவுக்கு பாதுகாப்பு வழங்க கூடாதெனக் கோரி நீதிமன்றில் மனு

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com