Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

எரித்திரியாவில் இருப்பதாகக் கூறப்படும் விடுதலைப் புலிகளுக்குச் சொந்தமான 10 இலகு ரக "ஸ்லின் -143 இசட்" விமானங்களின் உரிமையைப் பெற்றுக்கொள்ள சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வியடைந்திருப்பதாக சிறிலங்கா அரசின் உயர்மட்டத்திலிருந்து கிடைத்த நம்பத்தகுந்த தரப்புத் தகவல்கள் தெரிவித்தன.

இந்த விமானத்திற்கான உரிமை மற்றும் பொறுப்பு என்பவற்றை சிறிலங்கா அரசாங்கத்தினால் உறுதிப்படுத்த முடியாது போனதால் அந்நாட்டு விமான நிலைய அதிகாரிகள் விமானங்களை விடுவிக்க மறுப்பு தெரிவித்துள்ளனர்.

எரித்திரியாவில் விடுதலைப்புலிகளின் 10 விமானங்கள் இருப்பதாக அரச புலனாய்வுப் பிரிவினர் உறுதிப்படுத்தியிருந்த போதிலும் அவற்றைப் பெற்றுக்கொள்வதற்காக அங்கு சென்ற சிறிலங்கா விமானப்படை மற்றும் அரச அதிகாரிகள் எரித்திரிய விமான நிலையத்தில் விடுதலைப் புலிகளின் ஆறு விமானங்கள் மாத்திரம் இருப்பதைக் கண்டறிந்துள்ளனர்.

அங்கு நிறுத்திவைக்கப்பட்டிருந்த நான்கு விமானங்கள் கட்டணங்கள் செலுத்தப்பட்ட பின்னர் இன்னொரு நாட்டுக்கு கொண்டுசெல்லப்பட்டுள்ளதாக எரித்திரிய அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். விமானங்களின் உரிமை மற்றும் பொறுப்பாளிகள் யார் என்பது உறுதிப்படுத்தப்பட்ட பின்னரே அவற்றை விமான நிலையத்திலிருந்து இன்னொரு நாட்டுக்கு எடுத்துச்செல்ல அனுமதித்ததாக அந்த எரித்திரிய விமான நிலைய அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இரண்டு மாதங்களுக்கு முன்னரே இந்த நான்கு விமானங்கள் எரித்திரியாவிலிருந்து எடுத்துச் செல்லப்பட்டிருப்பதாகக் கூறபப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்லின் ரக விமானங்களை உற்பத்திசெய்யும் சொக்கோ ஸ்லோவிக்கியாவிடமிருந்து இரண்டு விமானங்களைக் கொள்வனவு செய்து அவற்றை விடுதலைப்புலிகளின் விமானங்களாக கூறி தேர்தல் குண்டாகப் பயன்படுத்த சிறிலங்கா அரசாங்கம் திட்டமிட்டிருப்பதாகவும் கூறப்படுகிறது.

வெளிநாட்டில் கைப்பற்றப்பட்ட விடுதலைப்புலிகளின் கப்பலாக கூறப்பட்டுள்ள "பிறின்ஸஸ் கிறிஸன்டா" கடற்கலம் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு தற்போது பொதுமக்கள் பார்வைக்கு விடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

நன்றி: ஈழநேஷன்

0 Responses to எரித்திரியாவில் புலிகளின் விமானங்களை கைப்பற்ற சிறிலங்கா அரசு மேற்கொண்ட முயற்சி தோல்வி!

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com