யாழ் நகரப்பகுதியில் ஒரே நாளில் இரு வேறு இடங்களில் சுடப்பட்ட நிலையில் இரண்டு இராணுவத்தினரின் சடலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
நேற்று புதன் கிழமை இரவு 1.20 மணியளவில் தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட சிப்பாய் ஒருவரின் சடலம் தயாற்பெட்டி சந்திக்கு அருகில் மீட்கப்பட்டது.
இதேவேளை, தன்னை தானே சுட்டு தற்கொலை செய்துகொண்ட இன்னொரு சிப்பாயின் சடலம் யாழ் நகரில் ஸ்ரான்லி வீதிக்கு அருகாமையில் உள்ள காவலரண் பகுதியிலிருந்து இன்று காலை மீட்கப்பட்டுள்ளது. பெரும்பாலும் நேற்று இரவு இந்த தற்கொலை சம்பவம் இடம்பெற்றிருக்கலாம் என்று யாழ். காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
அடுத்தடுத்து இடம்பெற்ற இந்த மர்ம மரணங்களினால் சந்தேகமடைந்துள்ள இராணுவத்தினர் குடாநாட்டின் சோதனை சாவடிகளுக்கு அருகில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். சம்பவங்கள் தொடர்பாக காவல்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

0 Responses to குடாநாட்டில் இன்னொரு சிப்பாயின் சடலம்!