பிரித்தானிய பாராளுமன்ற சதுக்கத்தில் இலங்கையில் வதைமுகாமில் உள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க கோரி, தமிழர் அல்லாத இந்து அமைப்புக்களால் மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போரட்டம் நடைபெற்றது.
புதன் (09/12/09) மாலை 6.20 மணிக்கு ஆரம்பமான மெழுகுவர்த்தி ஏந்திய கவனயீர்ப்பு போராட்டத்தில் பிரித்தானிய இந்து ஒன்றியம், பிரித்தானிய இந்து பேரவை, பிரித்தானியாவில் உள்ள கோயில்களின் ஒன்றியம், பிரித்தானிய இந்து மாணவர் அமைப்பு, விஸ்வ கிந்து பருசாத் ( பிரித்தானியா) ஆகிய அமைப்புக்களை சேர்ந்த பல நூற்றுக்கணக்கானவர்கள் கலந்து கொண்டனர்.
அத்துடன் இப் போராட்டத்தில் பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் பலரும் கலந்து கொண்டனர்.
முதலில் மெழுகுவர்த்தி ஏந்தியவர்கள் சமய பிரார்த்தனைகளில் ஈடுபட்டனர்.
பின்னர் அங்கே வந்திருந்த தமிழ் உறவுகளுடன் வதை முகாங்களில் உள்ள மக்களின் துன்பகளில் நாங்களும் பங்கெடுப்பதாகவும், அவர்கள் தங்கள் சொந்த நிலத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் அதற்கான சூழ்நிலைகளை பிரித்தானிய அரசு உட்பட அனைத்து நாடுகளும் செயற்பட அனைவரும் உழைக்க வேண்டும் எனவும் கருத்துக்களை பரிமாறிக்கொண்டனர்.
தமிழர் அல்லாதோரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த கவனயீர்ப்பு போராட்டத்திற்கு குருஜி ஸ்ரீ ஸ்ரீ ரவிசங்கர் அவர்களும் தனது வாழ்த்துக்களை தெரிவித்திருந்தார்.
இப் போராட்டத்திற்கு பிரித்தானிய தமிழர் பேரவை முழு அளவிலான ஆதரவை வழங்கியிருந்தது குறிப்பிடத்தக்கதாகும்.
1) வதை முகாமில் உள்ள அப்பாவி தமிழ் மக்களை விடுவிக்க வேண்டும்.
2) அப்பாவி தமிழ் மக்களை சுதந்திரமாக சந்திப்பதற்கு ஐரோப்பிய ஒன்றியத்திற்க்கு இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
3) மனித நேய அமைப்புக்கள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் தங்கு தடையின்றி நேரடியாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவிட இலங்கை அரசாங்கம் அனுமதி வழங்க வேண்டும்.
ஆகிய கோரிக்கைகள் அடங்கிய பதாதைகளை அங்கே காணக்கூடியதாய் இருந்தது.
மாலை 7.45 மணிக்கு இக்கவனயீர்ப்பு போராட்டம் முடிவடைந்தது.

0 Responses to இந்து அமைப்புக்களால் கவனயீர்ப்பு போராட்டம்