கே.பியின் கைதுக்கு உதவியவர் என்று கருதப்படும் தாய்லாந்தின் முன்னாள் பிரதமரும் தாய்லாந்தின் சீன ஆதரவு அரசியற்புள்ளியுமான தக்சின் சினவர்தாவுக்கு அரசியல் தஞ்சமளித்து அரசின் பொருளாதார ஆலோசகராக நியமிப்பதற்கு சிறிலங்கா முடிவெடுத்துள்ளதாக 'பாங்கொக் போஸ்ட்' பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
முன்னாள் பிரதமர் தக்சின் சினவர்த்தாவின் மைத்துனர் சோம்சாயை மேற்கோள்காட்டி இந்த தகவலை தாய்லாந்து பத்திரிகை வெளியிட்டுள்ளது.
இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்படுவதாவது:-
தாய்லாந்தின் முன்னாள் பிரதமர் தக்சின் சினவர்தாவிற்கு எதிராக அவரது ஆட்சிக்காலத்தின்போது பல்வேறு லஞ்ச,ஊழல் குற்றச்சாட்டுக்களுக்கும் மனித உரிமை மீறல் குற்றச்சாட்டுக்களுக்கும் முன்வைக்கப்பட்டன. தாய்லாந்தின் முக்கிய வர்த்தகர்களில் ஒருவராக இருந்து 1994 ஆம் ஆண்டு அரசியலுக்கு வந்து 2001 ஆம் ஆண்டு பிரதமராக தெரிவாகிய தக்சின் சினவர்தா 2006 ஆம் ஆண்டுவரை ஆட்சியிலிருந்த காலப்பகுதியில் தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு ஊழல்நடவடிக்கைகளில் ஈடுபட்டார் என்றும் தேசிய சொத்துக்களை வெளிநாடுகளுக்கு விற்றார் என்றும் ஏலம் ஒன்றின்போது சட்டவிரோதமான முறையில் மனைவியின் பெயரில் காணி வாங்கினார் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டார்.
மனித உரிமை அமைப்புக்கள், சர்வதேச மன்னிப்புச்சபை உட்பட பல்வேறு பன்னாட்டு அமைப்புக்களும் தக்சின் சினவர்தாவின் நடவடிக்கைகளை கண்டித்ததுடன் அவருக்கு எதிராக சட்டநடவடிக்கை எடுக்குமாறும் வலியுறுத்தியிருந்தன.
இந்நிலையில், 2006 ஆம் ஆண்டு தாய்லாந்து அரசு இராணுவப்புரட்சி மூலம் கைப்பற்றப்பட்டது. சீன ஆதரவாக தக்சினுக்கு எதிரான இந்த நடவடிக்கைகளில் அமெரிக்காவே பின்னணியிலிருந்ததாக அப்போது தகவல்கள் வெளியாகியிருந்தன. ஆனால், அதற்கு பின்னர் நடைபெற்ற தேர்தலில் தக்சினது கட்சி வெற்றியீட்டியதை அடுத்து கடந்த 2008 ஆம் ஆண்டு நாடு திரும்பினார்.
ஆனால், காணி வழக்கொன்றில் இவருக்கு தாய்லாந்து நீதிமன்றம் சட்டநடவடிக்கை எடுக்கப்போவதாக முற்கூட்டியே அறிந்துகொண்ட தக்சின், 2008 ஆம் ஆண்டு பீஜிங் ஒலிம்பிக் போட்டிகளை பார்க்க சென்றுவிட்டு, பின்னர் நாடு திரும்பவில்லை. அதன்பின்னர், இடம்பெற்ற தக்சினுக்கு எதிராக காணி வழக்கில் அவர் ஆஜராகாததை அடுத்து, தாய்லாந்து உயர்நீதிமன்றம் தக்சினுக்கு இரண்டு வருட சிறைத்தண்டனை விதிப்பதாக அறிவித்தது.
சீனாவில் 5.5 மில்லியன் பவுண்டஸ் பெறுமதியான சொகுசு பங்களாவை வாங்கியுள்ள தக்சின் அங்கிருந்து வெளிநாடு ஒன்று அரசியல் தஞ்சம் கோருவதற்கு முயற்சி செய்தார் - என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், அண்மையில், கே.பியை கடத்துவதற்கு சீனாவிடம் சிறிலங்கா உதவிகோரியபோது, தக்சின் சினவர்தாவை சீனா இந்த நடவடிக்கைக்கு உதவி கோரியதாகவும் தாய்லாந்து அரசில் உள்ள தக்சின் ஆதரவாளர்களின் உதவியுடன் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டாதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்த நடவடிக்கை வெற்றிகரமாக மேற்கோள்ளப்பட்டதற்கு நன்றிக்கடனாக தக்சின் சினவர்தாவுக்கு சிறிலங்காவின் அரசியல் தஞ்சமளித்து அவருக்கு தனது நாட்டின் பொருளாதார ஆலோசகர் பதவியை வழங்க சிறிலங்கா தீர்மானித்திருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. தக்சின் சினவர்தா சிறிலங்காவின் பொருளாதார ஆலோசகராக நியமிக்கப்பட்டால், அவரின் ஊடாக தனது பொருளாதார நலன்களை சிறிலங்காவில் முன்னெடுக்கலாம் என்று சீனா திட்டமிட்டள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், இது விடயமாக சிறிலங்கா அரச தரப்பில் பேசவல்ல நிதி அமைச்சர் சரத் அமுனுகமவிடம் கேட்டபோது, தனக்கு இதுபற்றி எதுவும் தெரியாது என்று பதிலளித்துள்ளார். தக்சின சினவர்தாவின் பின்னணியை பார்க்கும்போது அவரை ஆலோசகராக பணியமர்த்துவது தொடர்பாக சிறிலங்கா பரிசீலிக்கக்கூட விரும்பாது என்றும் அவர் கூறியுள்ளார்.
நன்றி: ஈழநேஷன்

0 Responses to கே.பி. கடத்தலுக்கு உதவிய சீன ஆதரவு முன்னாள் தாய்லாந்து பிரதமருக்கு அரசியல் தஞ்சமளிக்க சிறிலங்கா முடிவு!