பொன்சேகாவுக்கு ஆதரவளிக்கும் அரசியல்வாதிகள், வர்த்தகர்கள், பொதுஅமைப்புக்களின் பிரதிநிதிகள் ஆகியோர் தொடர்பான விவரங்களை சேகரிப்பதிலேயே இந்த புலனாய்வு பிரிவு முக்கிய கவனம் செலுத்துவதாக அவர் மேலும் தெரிவித்தார்.
அரசதலைவர் பாதுகாப்பு பிரிவில் 12 வருடங்கள் பணிபுரிந்த அபயவர்த்தன தலைமையில் ஐ.பி. ரஞ்சித், எஸ்.ஐ.ஜயசேகர, மடகம, ஜெயசிங்க, விஜயக்கோன் ஆகிய பொறுப்பதிகாரிகளின் கீழ் இந்த புலனாய்வுப்பிரிவு செயற்படுவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அவ்வாறு பொன்சேகாவுக்கு ஆதரவளிப்பவர்களை கைது செய்வதற்கான நடவடிக்கையை அரசின் உயர்மட்டத்தின் ஆசீர்வாதத்துடன் மேற்கொண்டுவரும் சிறிலங்கா விசேட படைப்பிரிவுக்கு இந்த புலனாய்வு பிரிவு தான் சேகரித்த தகவல்களை வழங்குவதுடன் குற்றச்சாட்டையும் பதிவு செய்வதாக அவர் தெரிவித்தார்.
0 Responses to பொன்சேகாவை ஆதரிப்பவர்களை கண்காணிக்க விசேட புலனாய்வுப்பிரிவு!