தடுத்துவைக்கப்பட்டுள்ள விமானத்திலிருந்து இறக்கப்பட்டுள்ள ஆயுதங்கள் அனைத்தையும் ஐக்கிய நாடுகள் சபையின் செலவில் தகர்த்து அழிப்பதற்கான அனுமதியை ஐக்கிய நாடுகள் சபையிடம் தாய்லாந்து அரசு கோரவுள்ளதாக தாய்லாந்து அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
தாய்லாந்து வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஒருவர் தெரிவிக்கையில் -
விமானத்திலிருந்து இறக்கப்பட்ட ஆயுதங்களை அனைத்தும் தாய்லாந்து இராணுவ தளம் ஒன்றில் வைத்து நூற்றுக்கணக்கான காவல்துறையினரின் பாதுகாப்புடன் ஆயுத நிபுணர்களால் சோதனையிடப்பட்டுள்ளன. சுமார் 145 தொகுதிகளில் காணப்பட்ட ஆயுதங்கள் அனைத்தும் சோதனையிடப்பட்டு அவை படம்பிடிக்கப்பட்டுள்ளன. ஆனால், சோதனைகளை மேற்கொண்ட நிபுணர்கள் இது தொடர்பான அறிக்கையை வெளியிடும் வரை ஆயதங்கள் தொடர்பான எந்த தகவலையும் உத்தியோகபூர்வமாக வெளியிடமுடியாது - என்று கூறியுள்ளார்.
கைப்பற்றப்பட்டுள்ள 35 தொன் ஆயுதங்களும் 18 மில்லியன் அமெரிக்கா டொலர்கள் பெறுமதியானவை என்று பூர்வாங்க விசாரணை அறிக்கைகள் தெரிவிக்கின்றபோதும் சரியான மதிப்பீடு இப்போது தெரிவிக்கமுடியாது என்றும் அவர் மேலும் கூறியுள்ளார்.
இதேவேளை, இந்த விமானம் வடகொரியாவில் ஆயுதங்களை ஏற்றுவதை அமெரிக்காவின் செய்மதி படம்பிடித்ததை அடுத்து, அமெரிக்க புலனாய்வுத்துறையினர் தாய்லாந்து அதிகாரிகளுக்கு தகவல் வழங்கிய பின்னரே, குறிப்பிட்ட விமானம் கைப்பற்றப்பட்டதாக பாங்கொக் போஸ்ட் நாளிதழின் ஆசிரியர் தலையங்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தாய்லாந்து இந்த விமானத்தை கைப்பற்றியதற்கு தெற்காசிய விவகாரங்களுக்கான அமெரிக்காவின் உதவி செயலர் ரொபேர்ட் ஓ ப்ளாக் தாய்லாந்து அரசுக்கு நன்றியையும் பாராட்டினையும் தெரிவித்துள்ளார்.
இது இவ்வாறிருக்க, விமானத்திலிருந்த ஐவர் மீதான விசாரணைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டுவருவதாகவும் அவர்கள் தொடர்ந்து பொய் கூறி வருவது விசாரணைகளில் தெரியவந்துள்ளதாகவும் -
விசாரணைகளின் முடிவில் அவர்கள் குற்றவாளிகளாக காணப்பட்டால் நாட்டிற்குள் சட்டவிரோதமாக ஆயுதங்களை கொண்டுவந்ததற்கு தாய்லாந்து சட்டத்தின்படி ஒவ்வொருவரும் தலா 10 வருட சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்றும் -
தாய்லாந்து ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

0 Responses to ஆயுதங்களை அழிப்பதற்கு ஐ.நா.விடம் நிதி கேட்க தாய்லாந்து முடிவு