இஸ்ரேலிடமிருந்து ஆறு அதிவேக அதிரடி படகுகளை சிறிலங்கா அடுத்த மாதம் வாங்கவுள்ளதாக சிறிலங்கா கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் திசர சமரசிங்க தெரிவித்துள்ளார்.கொழும்பில் இன்று வியாழக்கிழமை செய்தியாளர்களிடம் பேசுகையிலேயே அவர் மேற்குறித்த தகவலை கூறினார். அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில் -
விடுதலைப்புலிகளுடனான போர் முடிவடைந்த பின்னரும் சிறிலங்காவின் கடல் பாதுகாப்பை உறுதிப்படுத்தவேண்டிய கட்டாயம் உள்ளது. சிறிலங்கா கடல் எல்லையினுள் இந்தியா மீனவர்கள் அத்துமீறி பிரவேசிப்பதை கண்காணிப்பது உட்பட பல்வேறு பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு மேலதிக ரோந்து படகுகள் தேவை என்று கூறினார்.



0 Responses to அதிரடி படகுகளை சிறிலங்கா கொள்முதல்!