Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

போர்க்குற்ற விசாரணைகள் தொடர்பான ரோம் சாசனத்துக்கு கட்டுப்படதேவையில்லாத நாடாக சிறிலங்கா காணப்படுகின்றபோதும் சர்வதேச குற்றவிசாரணைகள் நீதிமன்றத்தில் ஏறியாகவேண்டிய பாரிய சிக்கலுக்குள் சிறிலங்கா மாட்டக்கூடிய சாத்தியக்கூறுகளே அதிகம் காணப்படுவதாக போர்க்குற்றங்கள் தொடர்பான சட்ட வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

அவர்கள் மேலும் தெரிவித்திருப்பதாவது:-

சிறிலங்காவுக்கு எதிராக போர்க்குற்ற வழக்க தாக்கல் செய்யப்பட்டு, அது தொடர்பாக ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு கிடைக்கப்பெற்றால், அந்த வழக்கு தொடர்பாக விசாரணை செய்யும்படி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றத்தின் பிரதான வழக்கு அதிகாரியிடம் கோரும் அதிகாரம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபைக்கு உள்ளது. இதன்பிரகாரம், சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றில் வழக்குக்கு முந்திய அமர்வு ஒன்றினை கூட்டி குறிப்பிட்ட போர்க்குற்றங்கள் குறித்து பிரதான வழக்கு அதிகாரி விசாரணைகளை மேற்கொள்ளுவார்.

சரணடைந்த விடுதலைப்புலிகளுக்கு என்ன நடந்தது என்று அண்மையில் ஐக்கிய நாடுகள் அதிகாரியான பிலிப் அல்ஸ்டன் சிறிலங்காவிடம் விளக்கம் கோரி அனுப்பிய கடிதம், .நா.வின் மேற்குறிப்பிட்ட நடவடிக்கைகளின் ஒரு அங்கமாகும். சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் பாதுகாப்பு அமைச்சின் செயலர் கோத்தபாயவின் உத்தரவுக்கேற்ப சுட்டுக்கொல்லப்பட்டார்கள் என்று கருத்து தெரிவித்தவர் அதிகாரமற்ற - ஆதாரத்துக்கு இணைத்துக்கொள்ள தேவையில்லாத - நபர் அல்லர். அப்போது படை நடத்திய நாட்டின் இராணுவ தளபதி. இவரது இந்த செவ்வி சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றின் பிரதான வழக்கு அதிகாரியினால் தற்போது வழக்குக்கான வடிவத்திற்குள் இணைக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான நடவடிக்கைகளை அந்த அதிகாரி மேற்கொண்டுள்ளார்.

.நா. பாதுகாப்பு சபையின் இந்த நகர்வு ரஷ்யாவினதோ அல்லது சீனாவினதோ வீட்டோ அதிகாரம் மூலம் தோற்கடிக்கப்பட்டாலும், சர்வதேச குற்ற விசாரணைகள் நீதிமன்றின் வழக்கு அதிகாரி சுயாதீனமாக செயற்படுவதற்கு அதிகாரம் கிடைக்கப்பெற்றவர். விசாரிக்கப்படும் வழக்கு தான் சேகரித்த ஆதாரங்களின் பிரகாரம் பாரதூரமானது என்று அவர் கருதுவாரேயானால், அதனை நீதிமன்றுக்கு எடுத்துச்சென்று சம்பந்தப்பட்டவர்களை கூண்டில் ஏற்றக்கூடிய அதிகாரம் அவருக்குள்ளது.

அவ்வாறு சர்வதேச போர்க்குற்ற விசாரணைகள் நீதிமன்றம் குறிப்பிட்ட வழக்கை கையாளும்போது 14(பி) சரத்தின்படி அந்த முயறிக்கு .நா. பாதுகாப்பு சபை நிச்சயம் அங்கீகாரம் வழங்கியே ஆகவேண்டும்.

சரணடைந்த விடுதலைப்புலிகளின் தலைவர்கள் படுகொலை செய்யப்பட்ட விடயம் சம்பந்தமாக சிறிலங்கா அரசுக்கு எதிராக குற்றச்சாட்டு முன்வைக்கப்பட்டுள்ளபோதும், அதனை சிறிலங்கா அரசு இன்னமும் விசாரணை செய்யவில்லை. ஆகவே, இந்த விடயத்தினை சுட்டிக்காட்டியே சர்வதேச குற்ற விசாரணை நீதிமன்றம் இலகுவாக சிறிலங்காவை தனது நீதிமன்றுக்கு இழுத்துவரும் சாத்தியங்கள் உள்ளன.

ஐரோப்பிய ஒன்றியமும் சிறிலங்கா அரசின் மனித உரிமைகள் பாதுகாப்பு விடயத்தில் அதிருப்தியடைந்திருப்பதை ரத்துச்செய்யவுள்ள ஏற்றுமதி வர்த்தக வரிச்சலுகை மூலம் காண்பிக்கும்போது, சிறிலங்கா அரசை சர்வதேச நீதிமன்றுக்கு இழுத்துவருவது கடினமாக வேலையாக இருக்காது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

0 Responses to போர்க்குற்ற விசாரணைகளில் சிறிலங்கா மாட்டியிருப்பது எவ்வாறு?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com