தமிழ் மக்களின் ஒரே விருப்பம் இறைமையுள்ள சுதந்திரமான தனித் தமிழீழம்தான் என்பதை வெளிப்படுத்தும் வாக்கெடுப்பில் பிரான்சில் வாழும் தமிழீழ மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளும்படி பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை கேட்டுக்கொண்டிருக்கின்றது என இன்று வெளியாகியுள்ள ஈழமுரசு தெரிவித்திருக்கின்து.
அச்செய்தியில் மேலும் தெரிவித்திருப்பதாவது:
சுதந்திரமான இறைமையுள்ள தனித் தமிழீழமே தமிழ் மக்களின் ஒரே அபிலாசை என்பதை வலியுறுத்தி பிரான்சில் வாக்கெடுப்பு ஒன்று இடம்பெறவுள்ளது. 1977ம் ஆண்டு யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் எடுக்கப்பட்ட தீர்மானத்தினை மீள வலியுறுத்தி புலம்பெயர்ந்து தமிழர்கள் வாழும் நாடுகளில் வாக்கெடுப்பு நடைபெற்று வருகின்றது.
கடந்த மே மாதம் நோர்வேயில் வாழும் ஈழத் தமிழ் மக்கள் வட்டுக்கோட்டைத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் கலந்து கொண்டு அதற்கு ஆதரவாக 99.98 வீதமானோர் வாக்களித்ததன் மூலம் சுநத்திரமும் இறையாண்மையும் உள்ள தமிழீழ தனியரசுக்கான தமது வேணவாவினை மீளுறுதிப்படுத்திவிட்டனர். அந்த வகையில் எதிர்வரும் 12ம், 13ம் திகதிகளில் பிரான்சில் நடைபெறவுள்ளது.
வாக்கெடுப்பிற்கான அனைத்து ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாக இந்த வாக்கெடுப்பினை ஏற்பாடு செய்துள்ள பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையினர் தெரிவித்துள்ளனர். பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவையின் இந்த முயற்சிக்கு பிரான்ஸ் தமிழ்ச் சங்கங்களும் தமது ஆதரவினை வழங்கியுள்ளன.
பிரான்சில் முதற் தடவையாக நடைபெறும் தமிழ் மக்கள் தழுவிய இந்த வாக்கெடுப்பு தலைநகர் பரிஸ் மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட தமிழ் மக்கள் வாழும் வெளி மாநிலங்களான ஸ்தாஸ்பூர்க், லியோன் முலுஸ், நீஸ், போர்சோலை, துலுஸ், தூர் ஆகிய மாநிலங்களிலும் நடைபெறவுள்ளது. ஏனைய மக்கள் குறைந்து வாழும் மாநிலங்களில் தபால் மூலமான வாக்குப் பதிவுகளுக்கு ஏற்பாட்டாளர்கள் ஏற்பாடு செய்துள்ளனர்.
சுமார் 30 வாக்களிப்பு நிலையங்களில் இடம்பெறவுள்ள இந்த வாக்கெடுப்பினை கண்காணிப்பதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதற்கும் பிரான்சின் நகரசபை உறுப்பினர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்கள் பல முன்வந்துள்ளதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழ் மக்களின் ஒரே விருப்பம் இறைமையுள்ள சுதந்திரமான தனித் தமிழீழம்தான் என்பதை வெளிப்படுத்தும் வாக்கெடுப்பில் பிரான்சில் வாழும் தமிழீழ மக்கள் அனைவரையும் பங்கு கொள்ளும்படி பிரான்ஸ் தமிழீழ மக்கள் பேரவை கேட்டுக்கொண்டிருக்கின்றது.
இந்த வாக்களிப்பில் கலந்துகொள்வதற்கு இலங்கையை பூர்வீகமாகக்கொண்ட 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் தகுதியுள்ளவரெனத் தெரிவித்துள்ள தமிழீழ மக்கள் பேரவையினர், பிரான்ஸ் நாட்டிற்கு புதிதாக வந்தவர்களும் வாக்களிக்கலாம் எனவும் வாக்களிப்போர் தமது வசிப்பிடம் எங்குள்ளதோ அதற்கருகில் உள்ள வாக்குசாவடியில் வாக்களிக்குமாறும் கோரியுள்ளனர்.
அதேவேளை, வாக்களிப்பு இடத்திற்கு வரஇயலாதோர் அவர்களின் பாதுகாவலர் அல்லது பிள்ளைகள் சம்பந்தபட்டவர்களின் அனுமதியுடன் அந்த வாக்கினை அளிக்கலாம் என்றும், இயலாதவர்களை வாக்குசாலைக்கு அழைத்து வருவதற்கான வாகன ஒழுங்குகளும் செய்து தரப்படும் என்றும் தெரிவித்துள்ளனர்.

0 Responses to "தமிழீழமே தமிழர் தாயகம்" - பிரான்சில் வாக்கெடுப்புக்கு அனைத்து ஏற்பாடுகளும் தயார்