Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

சிறீலங்கா அரசின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் ஒருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார். வதை முகாம்களில் அடைக்கப்பட்ட தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கிளிநொச்சிக்கு கொண்டுசென்று விடப்பட்டுள்ளவர்களில் முறிகண்டியின் மேற்குப் பகுதியில் உள்ள மக்களில் 35 அகவையுடைய நாகராஜா ஆரியமலர் என்பவர் படுகொலை செய்யப்பட்ட நிலையில் இவரது உடலம் கிளிநொச்சியில் உள்ள காவல்துறையினரால் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி .9 முதன்மை வீதிகளிலும் அதனை அண்டிய பகுதிகளிலும் மற்றும் முல்லைத்தீவின் மேற்குப் பகுதிகளிலும் சிங்களப் படைகள் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளர்கள். இவ்வாறு சிங்களக் காடையர்களின் மத்தியில்தான் தமிழ் மக்கள் மீள்குடியேற்றம் என்ற பெயரில் கொண்டுசென்று விடப்பட்டுள்ளார்கள்.

நேற்று ஆரியமலர் எனும் குடும்பப்பெண் தனது இருப்பிடத்தை விட்டு வெளியில் சென்றுள்ளதாகவும், வெளியில் சென்று நீண்டநேரமாகியும் இருப்பிடம் திரும்பாததால் இவரின் தாயார் காவல்துறையில் முறையிட்டுள்ளதை அடுத்து முறிகண்டியின் சித்தாண்டி பிரதேசத்தில் காவல்துறையினர் நடத்திய தேடுதலை அடுத்து இப்பெண் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

இப்பிரதேசம் எங்கும் சிறீலங்காப் படைப்பிரிவின் 58ஆவது டிவிசன் படையணியினர் முகாம்கள் அமைத்து பாதுகாப்பு கடமையில் ஈடுபட்டுள்ளார்கள். இவ்வாறான சூழலில்தான் தமிழ் மக்கள் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள். இப்படுகொலைக்கு பின்பு இப்பிரதேசத்தில் உள்ள மக்கள் மத்தியில் அச்சநிலை தேன்றியுள்ளது.

நன்றி: சங்கதி

1 Response to சிறீலங்காவின் ஆங்கிலப் புத்தாண்டு பரிசாக கிளிநொச்சியில் தமிழ்ப்பெண் படுகொலை

  1. எங்கள் வாழ்வும் எங்கள் வளமும் மங்காத தமிழென்று சங்கே முழங்கு !!!!!!!!!!

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    இழந்த குருதிக்கு நீதி கிடைக்கும்.

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    நீதி வெள்ளும்.(தமிழ் ஈழம் மலரும்.)

    ஓ… உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும்.

    ஓ… உலக மக்களே! ஈழத் தமிழனின் விடுதலைக்காக குரல் கொடுங்கள். உங்கள் குரல் சிங்களவனின் குரல்வளையை நெறிக்கட்டும்.

     

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com