Content feed Comments Feed
    “சுதந்திரமென்பது மனிதனின் ஆத்மார்த்மான தவிர்க்க முடியாத ஒரு தேவை, அது எட்டப்படும் வரை மனிதனின் ஒவ்வொரு துளி இரத்தத்திலும் அதற்கான வேட்கை செறிந்து கிடக்கும்”

அங்கு என்ன நடக்கிறதோ அது இங்கே நடக்கிறது. இந்தோனேசியாவின் கரைக்கப்பால் சிறிய மரப்படகொன்று நங்கூரமிட்டுள்ளது. ஐந்து மாத காலங்களாக அந்தப் படகு அங்கே தரித்து நிற்கிறது. அதில் சுமார் 240 பேர் தங்கியுள்ளனர். அவர்களால் கரைக்கு வரமுடியாது. அவ்வாறு வந்தால் அவர்கள் கைதுசெய்யப்பட்டு நாடுகடத்தப்பட்டு விடுவார்கள்.

அவர்கள் தமிழர்கள். 50 பேர் மட்டிலேயே அந்தப் படகில் தங்கியிருக்க முடியும். நிலைமையை உங்களால் கற்பனை செய்து பார்க்க முடியுமா? இல்லை, முடியாது. இவ்வாறு ஜோ பயோறிற்றோ என்ற ரொறன்ரோ ஸ்ரார் பத்திரிகையின் நகரப்பிரிவு எழுத்தாளர் தமது பத்தியில் எழுதியிருக்கின்றார்.

அவர் மேலும் தெரிவித்திருப்பதாவது;படகிலுள்ள சிலர் மலேசியாவிலுள்ள முகாம்களில் தங்கியிருந்தவர்கள். அண்மைக்கால யுத்தத்தினால் அவர்கள் யாவரும் நாட்டைவிட்டு வெளியேறியிருந்தவர்கள். அவர்களுக்கு இந்தோனேசிய அரசாங்கம் எந்த உதவியையும் மேற்கொள்ளவில்லை. எங்களுக்கு ஏன் அந்த விடயம் முக்கியமானதாக உள்ளது?

கப்பலிலிருக்கும் ஆட்களில் சுமார் அரைவாசிப் பகுதியினர் கனடாவில் உறவினர்களைக் கொண்டவர்களாகும். இங்கு மற்றொரு காரணமும் உள்ளது. ரொறன்ரோவைச் சேர்ந்த பெண்ணொருவர் அந்தப் படகைப் பார்ப்பதற்கு அண்மையில் சென்றிருந்தார். ஜெசீகா சந்திரசேகர் என்ற அந்தப் பெண் யோர்க் பல்கலைக்கழகத்தின் பி.எச்.டி. மாணவியாகும். 26 வயதுடைய அவர் கனடியன் கார்ட் என்ற சிறிய அரசசார்பற்ற அமைப்பின் உறுப்பினராகவும் உள்ளார்.

ஜெசீகா அண்மையில் தனது கதையைக் கூறியிருந்தார். "அந்தப் படகைப் பார்ப்பதற்கு நாங்கள் மிக நீண்டநேரமாக முயற்சித்தும் முடியவில்லை. சுமார் 5 நிமிடங்கள் அங்கிருந்தோம். பொலிஸார் எம்மைத் தடுத்து வைத்திருந்தனர். முதல் நாள் 11 மணித்தியாலங்கள் பொலிஸார் என்னை விசாரித்தனர். எனது கடவுச்சீட்டுகளை எடுத்துக்கொண்டனர். இரண்டாவது நாள் ஏழு மணித்தியாலங்கள் அவர்கள் எம்மை விசாரித்தனர். நீங்கள் யார்?,எங்கே இருந்து வருகிறீர்கள்?,உங்களை யார் அனுப்பியவர்கள்?,படகில் உங்கள் குடும்பத்தினர் யாராவது உள்ளனரா? என்று அவர்கள் தம்மைக் கேட்டதாக ஜெசீகா கூறினார்.

அந்தப் பெண் யார் என்பதை அவர்களுக்கு நான் கூறினேன். அவர் யோர்க் பல்கலைக்கழக மாணவியாகும். மூன்றாவது நாள் அவர்கள் எம்மை விமான நிலையத்துக்கு அழைத்துச்சென்று எங்களைத் திருப்பியனுப்பினார்கள். அந்தப் பெண் அச்சமடைந்திருந்தாரா? நான் கவலைப்பட்டேன். நாங்கள் கைதுசெய்யப்பட்டிருக்கக்கூடும். அதாவது படகிலிருந்தவர்களின் கதைகளைக் கேட்ட பின்னர் கைதுசெய்யப்பட்டிருக்கக்கூடும். ஒரு நிமிடம் பொறுத்திருங்கள்.

அந்தப் பெண் தடுத்து வைக்கப்பட்டிருந்தால் படகிலுள்ள ஆண்களும் பெண்களும் கரைக்கு வர முடியாது. இந்நிலையில், அவர்களுடைய கதைகளை அந்தப் பெண்ணால் எவ்வாறு கேட்டிருக்க முடியும்.

"அவர்களிடம் லப்டொப்பும் கமராவும் இருந்தது. அத்துடன், அவர்கள் ஸ்கைபையும் வைத்திருந்தனர். அவர்கள் படங்களை அனுப்பியிருந்தார்கள் என்று அப்பெண் கூறினார். நான் இன்ரநெற்றை நேசிக்கிறேன்.

படகில் 31 சிறு பிள்ளைகள் இருந்தார்கள். ஆக இளையவருக்கு ஒரு வயதாகும். கப்பலிலேயே அந்தக் குழந்தை நடக்கக் கற்றுக்கொண்டது. அக் குழந்தை இலங்கையில் பதுங்குக்குழிக்குள் பிறந்திருந்த குழந்தையாகும். ஷெல் வீச்சு இடம்பெற்ற வேளையில், அக்குழந்தை பிறந்திருந்தது. ஏதோவொரு வழியாக அந்தக் குழந்தையின் தாய் மலேசியாவிலுள்ள முகாமொன்றிற்குச் சென்றிருந்தார்.

கப்பலிலிருந்த மற்றொரு பெண் கடந்த வாரம் குழந்தையொன்றைப் பிரசவிக்கவிருந்தார். அந்தக் கப்பலானது வாட் தீவுக்கு அப்பால் நங்கூரமிட்டிருந்தால் நாங்கள் என்ன செய்திருப்போம்? அந்தப் படகு இங்கு இல்லை என்பதை நானறிவேன். உங்களின் மருமகள் படகில் பிறந்திருந்தால் நீங்கள் என்ன செய்திருக்க முடியும்?

"படகிலிருந்து அவர்கள் வெளியேற முயற்சித்தால் என்ன நடக்கும் என்பதையிட்டு நாம் பயப்படுகிறேன். அவர்கள் தாக்கப்படுவார்கள்,தடுத்து வைக்கப்படுவார்கள்.யு.என்.எச்.சி.ஆர். இல் இந்தோனேசியா கைச்சாத்திட்டிருக்கவில்லை என்று ஜெசீகா கூறினார்.

இப்போது என்ன நடக்கிறது? உத்தரவாதம் அளிப்பது தொடர்பாகவும் நடமாட்ட சுதந்திரம் குறித்தும் மருத்துவப் பராமரிப்புக் குறித்தும் பேச்சுவார்த்தை நடத்த நாம் முயற்சிக்கிறோம் என்று ஜெசீகா தெரிவித்தார்.

படகிலுள்ளவர்கள் பயங்கரவாதிகளென கூறுபவர்கள் தொடர்பாக நீங்கள் எதனைத் தெரிவிக்க விரும்புகிறீர்கள் என்று கேட்டேன். "யு.என்.எச்.சி.ஆர்.இன் நடைமுறைகள் உள்ளன. இந்த ஆட்கள் அகதிகளாகும். நெருக்கடிக்கு அஞ்சியே அவர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். அவர்களுடைய சாட்சியத்தை நாங்கள் கௌரவிக்க வேண்டும்%27 என்று ஜெசீகா கூறினார். தற்போது படகில் இருப்பவர்களின் உறவினர்கள் தொடர்பான விபரங்கள் திரட்டப்பட்டு அந்தத் தகவல் பலருக்குத் தெரிவிக்கப்படுகிறது. அகதி அனுசரணை பற்றிய தகவலை வழங்கும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

நீங்கள் பயப்பட்டிருக்கவில்லையா? என்று ஜெசீகாவை கேட்டேன். "நான் நடந்ததை திரும்பிப் பார்க்கும்போது ...கடவுளே என்று நான் நினைக்கிறேன். உண்மையில் கனடாவிற்கு திருப்பியனுப்பப்பட்டபோது நான் நெருக்கடியான நிலைமையிலிருந்தேன். ஏனெனில் கனடாவில் நான் சௌகரியமாக இருக்கிறேன். நன்றாகச் சாப்பிடுகிறேன். பாடசாலைக்குச் செல்கிறேன். ஆனால், படகிலுள்ளவர்கள் நாடு கடத்தப்பட்டால் அவர்கள் வித்தியாசமான நிலைமையை எதிர்கொள்வார்கள் என்று ஜெசீகா கூறினார்.

0 Responses to இந்தோனேசியக் கரையில் படகில் தங்கியிருக்கும் 240 இலங்கைத் தமிழர்களின் நிலைமை என்ன?

Post a Comment

Followers

தொடர்புக்கு: vannionline@gmail.com