சிறீலங்காவில் இராணுவப் புரட்சி செய்யத் திட்டமிட்டதாக முன்னாள் இராணுவ தளபதி சரத் பொன்சேகா கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.அவரது மருமகன் தனுன திலகரத்னே மீது ஆயுத தளவாடங்கள் வாங்கியதில் ஊழல் செய்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அவர் கொழும்பில் தலைமறைவாக உள்ளார்.
சிறீலங்கா காவல்தறையிடம் பிடிபட்டால் கடும் தண்டனையை அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதால் தனுன திலகரத்னே சரண் அடைய மறுக்கிறார். அவர் கப்பல் மூலம் இந்தியா தப்பிச் செல்ல திட்டமிட்டுள்ளதாக ஒரு தகவல் வெளியானது.
இதனால் சிறீலங்கா கடற்படை கண்காணிப்பை தீவிரப்படுத்தியது. இந்த நிலையில் ஆழ்கடல் பகுதியில் மீன் பிடித்து கொண்டிருந்த இந்திய கப்பல் ஒன்றை சிறீலங்கா கடற்படை கைப்பற்றி சென்றது.
அந்த கப்பலில் தான் தனுன தில கரத்னே தப்ப திட்டமிட்டிருந்தார் என்று அரசு சந்தேகிக்கிறது.



0 Responses to பொன்சேகா மருமகன் தப்பிச்செல்ல முயற்சி?