ஐனநாயகம் என்பது ஆபிரகாம் லிங்கோல்னின் வார்த்தையில் மக்களால் மக்களுக்காக உருவாக்கப்படும் மக்களின் அரசு என்பதாகும். இதையே ஈழப்போராளி தியாகி திலீபன் மக்கள் புரட்சி வெடிக்கட்டும் சுதந்திர தமிழீழம் மலரட்டும் என்றான். ஆகவே அரசோ அன்றி அதற்கான போராட்டமோ மக்கள் மயப்பட்டாலே வெற்றிபாதையில் பயணிக்கும் என்பது திண்ணமாகும்.
ஈழத்தமிழர் நாம் எம்மை நாமே சரிவரக் கட்டமைத்து எமது நிலைகுலையாது செப்பனிட்டு பயணிப்பதே இன்றைய தேதிக்கு காலம் எமக்கிட்டுள்ள கட்டளையாகும். இதை உணர்ந்த ஒவ்வொரு தமிழனும் எங்கு வாழ்ந்தாலும், எங்கு வளர்ந்தாலும் எம்மினத்தின் வேரைக்காப்பதற்கு ஓரணியில் திரண்டு தேசிய ஒருமைப்பாட்டுடன் உழைக்கவேண்டியது வரலாற்றுக்கடைமையாகும்.
அதிமுக்கியம்வாய்ந்த இத்தேவைகளின் அடிப்படையிலும், சுவிஸ் வாழ் தமிழர்களாகிய நீங்கள் இவ்வாண்டு தை மாதம் 23ம் 24ம் திகதிகளில் சுதந்திர தமிழீழத்துக்கான வாக்கெடுப்பில் ஏகோபித்த ஆதரவுடன் வழங்கிய மக்களாணையின் அடிப்படையிலும் எமது சமூக பொருளாதார அரசியல் நலன்களைத் தீர்மானிப்பதற்கு மக்களாகி உங்கள் வாக்குகளுடன் நேரடி சனநாயக வழிமுறையினூடாக மக்கள் பிரதிநிதிகள் தெரிவுசெய்யப்பட்டு சுவிஸ் ஈழத்தமிழர் அவை ஒன்று உருவாக்கப்படவுள்ளதை மகிழ்ச்சியுடன் அறியத்தருகிறோம்.
இத்தேர்தலில் சுவிஸில் வாழும் அனைத்து தமிழர்களுக்கும் வேட்பாளர் உரிமையும் வாக்களிக்கும் உரிமையும் உண்டு. இத் தேர்தலில் வேட்பாளராக போட்டியிட விரும்புவோர் தங்கள் வேட்புமனுக்களை காலம் தாமதிக்காது எதிர்வரும் 12. 03. 2010 திகதிக்குள் தேர்தல் ஆணையகத்துக்கு அனுப்பிவகைகுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.
வேட்புமனுத்தாக்கல் செய்வதற்கான தராதரங்கள் மற்றும் விண்ணப்பப்படிவங்களை சுவிஸ்தேர்தல் இணையத்தளமான www.tamilelection.chல் பெற்றுக்கொள்ளலாம்.



0 Responses to மார்ச் 28 ஆம் திகதி சுவிஸ் ஈழத்தமிழர் அவைக்கான தேர்தல்