தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு ஆதரவான புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி வெளிநாட்டு பயணங்களை கைவிட முடியாது என அரசாங்கப் பாதுகாப்புப் பேச்சாளர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.மேற்குலக நாடுகளில் புலி ஆதரவாளர்களின் செயற்பாடுகளுக்கு அஞ்சி பயணங்களை ரத்து தசெய்ய முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் தமிழீழ விடுதலைப் புலிகளை படையினர் முழுமையாக இல்லாதொழித்துள்ளதாகவும், புலி ஆதரவு புலம்பெயர் மக்களின் செயற்பாடுகள் வெளிநாடுகளில் தொடர்வதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக புலி ஆதரவு புலம்பெயர் தமிழர்களினால் அரசாங்க அமைச்சர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எவ்வாறெனினும், வெளிநாட்டு உறவுகளை வலுப்படுத்திக் கொள்ளும் நோக்கில் இலங்கை அமைச்சர்கள் மேற்கொள்ளும் வெளிநாட்டு விஜயங்கள் கைவிடப்பட மாட்டாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, புலி ஆதரவாளர்களின் அச்சுறுத்தல் காரணமாக ஐக்கிய நாடுகளுக்கான இலங்கையின் நிரந்தரப் பிரதிநிதி டொக்டர் பாலித கொஹணேவின் கனடா விஜயம் ஒத்தி வைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.



0 Responses to புலம்பெயர் தமிழர்களுக்கு அஞ்சி வெளிநாட்டு பயணங்கள் கைவிடப்பட மாட்டாது: ரம்புக்வெல