ஊடகவியலாளர்கள் அடிக்கடி கொல்லப்படுவது மற்றும் கொலைஞர்கள் சுதந்திரமாக தப்பிச் செல்லும் சம்பவங்கள் இடம் பெறும் நாடுகள் பற்றி ஊடகவியலாளர்களை பாதுகாக்கும் குழு எடுத்த மதிப்பீட் டில் ஈராக், சோமாலியா, சியறாலியோன் ஆகியவற்றை அடுத்து சிறிலங்கா நான்காம் இடத்தை வகிக்கிறது. ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் நாடுகளை பொறுத்த மட்டில் இலங்கை 13ஆம் இடத்தில் உள்ளது.மேற்படி சம்பவங்கள் குறித்து விசாரணை செய்ய தவறிய நாடுகள் குறித்து எடுக் கப்பட்ட மதிப்பீடு தொடர்பான குழுவின் 2009ஆம் ஆண்டு அறிக்கையில் இலங்கை எந்தவொரு சம்பவம் பற்றியும் விசாரணை செய்து பொறுப்பானவர்களை கண்டுபிடிக்கவில்லை என்று தெரிவிக்கப்ப்டடுள்ளது.



0 Responses to ஊடகவியலாளர்கள் கொல்லப்படும் பட்டியலில் சிறிலங்காவுக்கு நான்காம் இடம்