இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது:
அவுஸ்திரேலியாவை நோக்கி செல்லும் பெருமளவான அகதிகளுக்கான பாதுகாப்பை வழங்குவத்கு அவுஸ்திரேலியா அரசு மறுத்து வருவதால் அகதிகள் தொடர்பான தமது நடைமுறைகளை மீளாய்வு செய்யவுள்ளதாக ஐக்கிய நாடுகள் சபையின் அகதிகளுக்கான அமைப்பு தெரிவித்துள்ளது.
பெருமளவான அகதிகள் அவுஸ்திரேலியாவை நோக்கி செல்வதால் போரினால் பாதிக்கப்பட்ட நாடுகள் தொடர்பில் மீண்டும் ஒரு ஆய்வை மேற்கொள்ளும் நிலைக்கு ஐ.நா தள்ளப்பட்டுள்ளதாகவும், சிறீலங்கா மற்றும் ஆப்கானிஸ்த்தான் ஆகிய நாடுகளில் இருந்து செல்லும் அகதிகளின் பாதுகாப்பு தொடர்பான நடைமுறைகளை தரமிறக்கவுள்ளதாகவும் ஐ.நா தெரிவித்துள்ளது.
ஆப்கானிஸ்த்தானில் இருந்து அதிகளவிலான அகதிகள் அண்மையில் அவுஸ்த்திரேலியாவுக்கு வந்துள்ளதாகவும், கிறிஸ்மஸ் தீவுகளில் உள்ள தடுப்பு முகாம்களில் 700 சிறீலங்கா அகதிகள் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாகவும் உள்நாட்டு விவகார அமைச்சக பேச்சாளர் பிரன்டன் ஓ கோனோர் தெரிவித்துள்ளார்.



0 Responses to அகதிகள் தொடர்பான தமது நடைமுறைகளை மீளாய்வு செய்வதற்கு ஐ.நா திட்டம்